27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
201706101533458254 sura meen puttu. L styvpf
சிற்றுண்டி வகைகள்

சூப்பரான சுறா புட்டு

மிகவும் எளிதில் செய்யகூடியது இந்த சுறா புட்டு. இந்த சுறா புட்டை நாளை செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.

சன்டே ஸ்பெஷல்: சூப்பரான சுறா புட்டு
தேவையான பொருட்கள் :

சுறா மீன் – 1/4 கிலோ
வெங்காயம் – 2
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை – சிறிதளவு
கடுகு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சுறா மீனை சுத்தம் செய்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் வேக வைக்கவும். வெந்ததும் அதை ஆறவைத்து நன்றாக ஆறியதும் சுறா மீனின் தோலை நீக்கி நன்றாக உதிர்த்து கொள்ளவும்.

* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு பொரிந்ததும் பொடியாக பச்சை மிளகாய், வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

* பின்னர், இஞ்சி, பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

* அடுத்து அடுப்பின் தீயை குறைத்து அதில், உதிர்த்து வைத்துள்ள சுறா மீனைச் சேர்த்து நன்றாக கிளறவும்.

* மீன் நன்றாக உதிரி உதிரியாக வரும் வரை கிளறி விடவும்.

* கடைசியாக உதிரியாக வந்தவுடன் கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

* நாக்கை சுண்டி இழுக்கும் சுறா புட்டு ரெடி!201706101533458254 sura meen puttu. L styvpf

Related posts

குழந்தைகளுக்கு விருப்பமான பிஸ்கட் லட்டு

nathan

சீனி வடை

nathan

மு‌ட்டை க‌ட்லெ‌ட்

nathan

சத்தான முளைகட்டிய நவதானிய சுண்டல்

nathan

பால் அப்பம் செய்முறை விளக்கம்

nathan

இஞ்சித் துவையல் வகைகள்!

nathan

மிரியாலு பப்பு

nathan

மாலை நேர டிபன் கேழ்வரகு ஆலு பூரி

nathan

மழைக்கால குட்டி பசியை போக்க பனீர் பஜ்ஜி!…

sangika