28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
24 1485241202 4 hair fall
தலைமுடி சிகிச்சை

செம்பருத்தி பொடியைக் கொண்டு தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி?

இன்றைய காலத்தில் தலைமுடியை சரியாக பராமரிக்காவிட்டால், மாசடைந்த சுற்றுச்சூழலால் தலைமுடி பலவீனமாகி, உதிர ஆரம்பிப்பதுடன், பொலிவிழந்து, வறட்சியுடன் அசிங்கமாக நார் போன்று காணப்படும். தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த எத்தனையோ இயற்கை பொருட்கள் உள்ளன. அதில் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, நெல்லிக்காய், செம்பருத்தி போன்றவை குறிப்பிடத்தக்கவை

இப்போது நாம் அதில் செம்பருத்தியின் பொடியைக் கொண்டு எப்படி தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது என காணலாம். தற்போது நகர்புறத்தில் செம்பருத்தி செடியைக் காண்பது என்பது அரிதாக உள்ளது. எனவே நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் செம்பருத்தி பொடியைத் தான் பயன்படுத்த வேண்டியுள்ளது.

தலைமுடியின் வலிமையை அதிகரிக்க…
தலைமுடி பலவீனமாக இருந்தால் தான் உதிர ஆரம்பிக்கும். ஆகவே இதன் வலிமையை அதிகரிக்க, 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் தேங்காய் பாலுடன், 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் செம்பருத்தி பொடியை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, தலையில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், தலைமுடி வலிமையாக இருக்கும்.

எண்ணெய் பசை நீங்க…
செம்பருத்தி பவுடர் நல்ல ஹேர் கிளின்சராகவும் பயன்படுகிறது. அதற்கு செம்பருத்தி பொடியை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் சீகைக்காய் பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இதனால் தலையில் உள்ள அதிகப்படியான எண்ணெய் வெளியேறிவிடும்.

பொடுகு நீங்க…
வெந்தயத்தை இரவு முழுவதும் மோர் மற்றும் செம்பருத்திப் பொடியுடன் சேர்த்து ஊற வைத்து, மறுநாள் காலையில் இக்கலவையை அரைத்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து அலச வேண்டும். இதனால் பொடுகில் இருந்து விடுபடலாம்.

தலைமுடி உதிர்வதைத் தடுக்க…
ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சிவப்பு செரும்பருத்தி பொடியுடன், 3 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் சில துளிகள் ரோஸ்மேரி எண்ணெய் சேர்த்து கலந்து, தலையில் தடவி நன்கு ஊற வைத்து பின் அலச வேண்டும். இதனால் தலைமுடி உதிர்வது குறையும்.

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க…
செம்பருத்தி பூ மற்றும் இலையை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் ஆலிவ் ஆயில் மற்றும் நீர் சேர்த்து கலந்து, தலைமுடியின் முனை வரை தடவி, 15 நிமிடம் ஊற வைத்து பின் அலச வேண்டும்.

நரைமுடியைப் போக்க…
செம்பருத்தி பொடி மற்றும் மருதாணி பொடியை ஒன்றாக கலந்து நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, தலைமுடியில் தடவி 30-45 நிமிடம் ஊற வைத்து அலச, நல்ல பலன் கிடைக்கும்.24 1485241202 4 hair fall

Related posts

இதை செய்யுங்கோ..!! தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டியது அவசியமா.?

nathan

வேம்பாளம் பட்டை -கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்

nathan

முடி கொட்டுதல்? இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், முடி இரண்டு மடங்கு வேகமாக வளரும்…

nathan

முடி பராமரிப்பு குறிப்புகள் (Hair Care Tips in Tamil)

nathan

தலை முடி உதிராமல் நன்கு வளர, beauty tips in tamil

nathan

எலி வால் போல கூந்தல் அசிங்கமா இருக்க? அப்ப இத செய்யுங்க ….

nathan

முடி உ‌திர‌க் காரண‌ம் எ‌ன்ன ?

nathan

உடல் உஷ்ணம் நீக்க கேரட் தக்காளி சூப் பொடுகுதொல்லை நீங்க

nathan

கூந்தல் உடைவதைத் தடுக்கும் கற்றாழை தேங்காய் எண்ணெய்!

nathan