25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
உடல் பயிற்சி

உடற்பயிற்சிக்கு பின் செய்யும் தவறுகள்

உடற்பயிற்சிக்கு பின் செய்யும் தவறுகள்

தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வருவது என்பது சிறப்பான ஒன்று. ஆனால் அப்படி அன்றாடம் செய்யும் உடற்பயிற்சிக்கு பின்னர் செய்ய வேண்டியவைகளை சரியாக செய்யாமல் போனால், உடற்பயிற்சி செய்வதே வீணாகிவிடும்.உடற்பயிற்சிக்கு பின், மறுநாள் மீண்டும் உடற்பயிற்சி செய்வதற்கு உடலுக்கு போதிய ஓய்வு தேவைப்படும். அத்தகைய ஓய்வு கிடைக்காமல் தொடர்ந்து கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், உடலில் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

எனவே உடற்பயிற்சி செய்த பின்னர் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கேட்டுத் தெரிந்து கொண்டு, அவற்றைப் பின்பற்ற ஆரம்பியுங்கள். இங்கு உடற்பயிற்சிக்கு பின்னர் மேற்கொள்ள வேண்டியவைகளை பார்க்கலாம்..

• உடற்பயிற்சி செய்து முடித்த பின்னர், உடலை ரிலாக்ஸ் அடையச் செய்யும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இப்படி செய்வதால், கடுமையான உடற்பயிற்சியின் போது அதிகமாக இருந்த இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு சாதாரண நிலைக்கு வந்து, இதனால் தீவிரமான பிரச்சனை ஏதும் நேராமல் தடுக்கும்.

•  ஏனெனில் உடற்பயிற்சியின் போது அதிகமாக வியர்த்ததால், உடையில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் குடிப் புகுந்திருக்கும். அத்தகைய உடையை நீண்ட நேரம் உடுத்தினால், சருமத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே தவறாமல் உடற்பயிற்சிக்கு பின், உடைகளை மாற்றுவதோடு, அதனை துவைத்து விடவும் வேண்டும்.

உடையை மாற்றி துவைத்த பின்னர், குளித்துவிட வேண்டும். வெறும் உடையை மட்டும் மாற்றினால், சருமத்தில் வியர்வை படலம் ஏற்பட்டு, பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஆகவே உடற்பயிற்சிக்கு பின்னர் குளித்துவிடுவது நல்லது.

• உடற்பயிற்சிக்கு பின் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், உடற்பயிற்சியின் போது கடுமையான காயங்களைக் கண்ட உடல் தசைகள் ரிலாக்ஸ் ஆகாது. ஆகவே உடற்பயிற்சிக்கு பின்னர் எவ்வளவு தண்ணீர் குடிக்க முடியுமோ அவ்வளவு தண்ணீர் குடியுங்கள். இதனால் உடல் பழைய நிலைக்கு வரும்.

Related posts

தினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் தெரியுமா?

nathan

பைக் ஓட்டினா… பயிற்சி செய்யுங்க!

nathan

உடற்பயிற்சியின் போது ஆண்கள் செய்யும் சில தவறுகள்

nathan

இடுப்பு, தொடைக்கான பயிற்சிகள் !

nathan

உயர் ரத்த அழுத்தம், இருதய பக்க கோளாறுகள், தூக்கமின்மைக்கு பயனுள்ள பயிற்சி யோக நித்திரை

sangika

நடைப்பயிற்சி நன்மைகள் (BENEFITS OF WALKING)

nathan

இடுப்பு, தொடைக்கான சைட் லையிங் லெக் ரைஸ் பயிற்சி

nathan

பர்வதாசனம்

nathan

முதுகு வலியை குணமாக்கும் அதோமுக ஸ்வனாசனா

nathan