அழகாய் இருப்பதை விட இளமையாக இருப்பது வரம். எல்லாருக்கும் அது கை கூடாது. சிலர் என்னதான் மிகவும் அழகாக இருந்தால் விரைவில் முதுமையான தோற்றம் வந்துவிடும்.
எப்படி உங்கள் இளமையை பாதுகாக்கலாம் என சந்தேகங்கள் வரலாம். மிக முக்கியமான ஒன்றை நீங்கள் நிறுத்த வேண்டும். மேக்கப் பற்றும் ரசாயனம் மிகுந்த க்ரீம்களை உபயோகிப்பது. அது தவிர்த்து நீங்கள் இளமையை தகக் வைக்க கீழ்கண்டவற்றை செய்து பாருங்கள். பலன் கிடைக்கும்.
பாதாம் மற்றும் பால் : பாதாம் பருப்பை ஊறவைத்து, பால் விட்டு அரைத்து அந்த விழுதை முகத்தில் பூசி வந்தால் முகச்சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றம் கிடைக்கும். முகச் சதை இறுகும்.
வாழைப்பழம் மற்றும் உருளை சாறு : ஒரு டீஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் சிட்டிகை பார்லி பவுடரைக் கலந்து மசித்த வாழைப்பழத்தைச் சேர்த்து முகத்தில் பூசுங்கள். 20 நிமிடம் கழித்து கழுவுங்கள்.
தயிர் கடலை மாவு : சிறிது தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவினால், அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.
பால்பவுடர் மற்றும் வெள்ளரிச் சாறு : முகத்தைத் தினமும் மூன்று முறை குளிர்ந்த நீரைக்கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். வெள்ளரிச்சாறுடன், பால் பவுடர் கலந்து தொடர்ந்து ஒரு மாதம் தடவினால், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாகக் காணப்படும்.
கடுகு எண்ணெய் : குளிர் காலத்தில் கடுகு எண்ணெய் பயன்படுத்தி குளிப்பதன்மூலம் சருமம் மினுமினுக்கும். குளிருக்கு இதமாகவும் இருக்கும். இந்த சமயத்தில் சுருக்கம் வராமல் பார்த்துக் கொண்டாலே வெயில் காலத்தில் புதுப் பொலிவு வரும்.
எண்ணெய் மசாஜ் : நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்துக் காய்ச்சி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் குளிக்கும்போது இந்த எண்ணெயை உடலில் தடவிக் கொள்ளுங்கள். இதனால் சருமம் ஈரப்பதத்துடன் இள்மையாக இருக்கும்.