36.7 C
Chennai
Monday, Jul 14, 2025
1494061283 2592
அசைவ வகைகள்

இந்த முறையில் மட்டன் குழம்பு வைத்து பாருங்கள் சுவை அப்படி இருக்கும்….

தேவையான பொருட்கள்:

மட்டன் – 3/4 கிலோ
சின்ன வெங்காயம் – 1/2 கிலோ (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
மல்லி தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
பட்டை – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
பிரியாணி இலை – 1
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைக்க வேண்டியவை:

வரமிளகாய் – 10
கறிவேப்பிலை – சிறிது
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
வெங்காயம் – சிறிதளவு
சோம்பு, கசகசா – தலா 1 டீஸ்பூன்
தேங்காய் – அரை மூடி

அரைக்க வேண்டியை:

முதலில் மட்டனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவி வைத்துள்ள மட்டன், மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி வரமிளகாய், சிறிது கறிவேப்பிலை, சீரகம் மற்றும் மிளகு சேர்த்து வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அதே வாணலியில் உள்ள எஞ்சிய எண்ணெயில் பாதி வெங்காயத்தை போட்டு வதக்கி இறக்க வேண்டும்.

அடுத்து, மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின் வதக்கிய அனைத்தையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு, நைஸாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை:

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கி, மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு 5 நிமிடம் வதக்கிவிட வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் வேக வைத்துள்ள மட்டனை ஊற்றி, ஒரு கொதி விட வேண்டும். பின் அத்துடன் தேங்காய் விழுதை தவிர, அரைத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து, உப்பு போட்டு நன்கு 10 நிமிடம் கொதிக்க விடவும். இறுதியில் தேங்காய் விழுதை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊர்றி கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான மட்டன் குழம்பு தயார்.1494061283 2592

Related posts

ஆட்டுக்கால் பாயா செய்ய வேண்டுமா?….

nathan

கிராமத்து கோழி குழம்பு

nathan

சுவையான… முட்டை தொக்கு

nathan

மட்டன் கறி (Chettinad Mutton Curry)

nathan

சத்து நிறைந்த மேத்தி ஆம்லெட்

nathan

ஸ்பைசியான இறால் பெப்பர் ப்ரை செய்வது எப்படி

nathan

சிக்கன் குருமா

nathan

எலும்பு குழம்பு

nathan

சன்டே ஸ்பெஷல்: ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் பிரை

nathan