31.8 C
Chennai
Wednesday, Jul 16, 2025
whiteheads 27 1485497052
முகப் பராமரிப்பு

மூக்கில் இருக்கும் அசிங்கமான வெண்புள்ளிகளைப் போக்க வேண்டுமா? அப்ப இத செய்யுங்க…

கரும்புள்ளிகளைப் போன்றே வெண்புள்ளிகளும், மூக்கு, கன்னம் மற்றும் தாடைப் போன்ற பகுதிகளில் வரும். இப்பிரச்சனையால் எண்ணெய் பசை சருமத்தினர் தான் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். மேலும் இந்த வெண்புள்ளி பிரச்சனையானது ஹார்மோன்கள் மற்றும் மரபணுக்களாலும் வரும்.

வெண்புள்ளிகளானது சருமத்துளைகளில் அழுக்குகள், இறந்த செல்கள் அல்லது அதிகப்படியான எண்ணெய் சுரப்பால் அடைப்பு ஏற்படுவதால் வரும். வெண்புள்ளிகளை நீக்குவது என்பது சற்று கடினமானது. இங்கு அந்த அசிங்கமான வெண்புள்ளிகளைப் போக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை நீர் கொண்டு பேஸ்ட் செய்து, வெண்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, சிறிது நேரம் ஸ்கரப் செய்து பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும். குறிப்பாக இச்செயலை செய்த பின் தவறாமல் டோனரைப் பயன்படுத்துங்கள்.

ஆவிப்பிடிப்பது ஆவிபிடிப்பதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் பளிச்சென்று பொலிவோடு இருக்கும். அதற்கு ஆவி பிடித்த பின், சுத்தமான துணியால் சருமத்தை நன்கு துடைத்து எடுக்க வேண்டும்.

சர்க்கரை சர்க்கரையை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள் போன்றவை முழுமையாக வெளியேறும்.

ஓட்ஸ் ஓட்ஸை பொடி செய்து தயிர் சேர்த்து கலந்து, மூக்கு, கன்னம் மற்றும் தாடை பகுதிகளில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள வெண்புள்ளிகள் நீங்குவதோடு, சருமமும் வறட்சி அடையாமல் மென்மையாக இருக்கும்.

ஆப்பிள் சீடர்
வினிகர் ஆப்பிள் சீடர் வினிகரை வெதுவெதுப்பான நீருடன் சரிசம அளவில் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து, நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், வெண்புள்ளிகள் மறைந்துவிடும்.

பட்டை பட்டை பொடியுடன் தேன் சேர்த்து கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்துக் கழுவ வேண்டும். இதனால் அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வெண்புள்ளிகளை மட்டுமின்றி, முகப்பருக்களையும் போக்கும்.

கடலை மாவு கடலை மாவை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு காய வைத்து, குளிர்ந்த நீரில் தேய்த்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக நீங்குவதோடு, வெண்புள்ளிகளும் உருவாகாமல் இருக்கும்.

whiteheads 27 1485497052

Related posts

ஹீரோயின் மாதிரி உங்க முகம் பொலிவா பிரகாசமா மின்னணுமா?

nathan

முகம் பளிச்சிட சில டிப்ஸ்

nathan

சூப்பர் டிப்ஸ்! சரும சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும் பீச் பழ ஃபேஸ் பேக்

nathan

முகம் பளபளக்க/ Kasthuri Manjal

nathan

தேவையற்ற முடிகளை நீக்கும் மஞ்சள் பேஸ் பேக்

nathan

வெயில் காலங்களில் முகத்துக்கு பவுடர் – கிரீம் பயன்படுத்த வேண்டாம்

nathan

நாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க சின்ன சின்ன உத்தி!…

nathan

உங்களுக்கான தீர்வு முகப்பருக்களுக்கு நிரந்தர சிகிச்சை சில வாரங்கள் மட்டுமே

nathan

உங்களுக்கு தெரியுமா குளிர்காலத்தில் பேஷியல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan