25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
18 1442552302 10 doctor
மருத்துவ குறிப்பு

எக்காரணம் கொண்டும் மருத்துவரை பார்க்கமாட்டேன் என்பதற்கு மக்கள் வைத்திருக்கும் மடத்தனமான காரணங்கள்!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லியிருந்தாலும், உடல் நலமில்லாமல் போவது மனித வாழ்க்கையின் ஒரு பகுதி. மனிதர்கள் தங்களால் முடிந்த வரையிலும் உறுதியாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்க முயன்று வந்தாலும், அந்த முயற்சி எப்பொழுதும் வெற்றி பெறுவதில்லை.

சில நோய்கள் ஊட்டச்சத்து குறைபாடுகளாலும், வேறு சில நோய்கள் தீங்கு விளைவிக்கும் கிருமிகளாலும் மற்றும் பிற வழிமுறைகளின் மூலமாகவும் பரவுகின்றன. மேலும், வயது ஏற ஏற வரக்கூடிய வேறு சில நோய்கள் உள்ளன. உங்களால் முடிந்த வரையிலும் இவற்றை வராமல் தவிர்க்க முயற்சிக்கலாம், ஆனால் எப்பொழுதும் உடல் உறுதியுடனும், நலமாகவும் இருக்க முடியும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.

இந்த சூழலில் நோய்களை குணப்படுத்துவதில் திறமையும், அறிவையும் பெற்றிருக்கும் மருத்துவர்களைச் சென்று பார்ப்பது இன்றியமையாதது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. ஒவ்வொரு நோய்க்கும் அதன் தன்மை, அறிகுறிகள், ஆய்வு செய்தல் மற்றும் சிகிச்சை அளித்தல் போன்றவை மாறுபட்டவையாக உள்ளன.

இதற்காக அந்தந்த துறைகளில் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களைப் பார்க்க வேண்டியுள்ளது. நோய்களைப் பொறுத்த வரையிலும் அவற்றிற்கு ஆண், பெண் என்ற பாகுபாடில்லை – அது அனைவரையும் பாதிக்கிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் நோய்களுக்கான சிகிச்சைகள் பற்றி ஆச்சரியமான சில உண்மைகளை வெளியே கொண்டு வந்துள்ளன.

மருத்துவர்களையே பார்க்காத மனிதர்களும் இங்கு இருக்கிறார்கள். இவர்கள் மருத்துவர்களை ஏன் பார்க்கவில்லை என்பதற்கு பல்வேறு விதமான காரணங்கள் உள்ளன. இந்த காரணங்கள் மனிதருக்கு மனிதர் வேறுபடுகின்றன. இவ்வாறு கண்டறியப்பட்ட காரணங்களில் முதல் 10 காரணங்களை இந்த கட்டுரையில் காண்போம்.

உடல் தொடர்பான இரகசியங்களை வெளியே சொல்ல விரும்புவதில்லை மருத்துவர்களை பார்க்காமல் இருப்பதற்கு சொல்லும் முதல் 10 காரணங்களில் ஒன்றாக இது உள்ளது. இவர்கள் தங்களுடைய உடல் சார்ந்த இரகசியங்களை மருத்துவர்களிடம் சொல்ல விரும்புவதில்லை. இந்த இரகசியங்களை வெளியிடுவதற்கு பயப்படுபவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்!

மருத்துவரின் மேல் நம்பிக்கையில்லை! இது அனைவருக்கும் பொருந்தக்கூடிய காரணமாக இல்லாவிட்டாலும், மருத்துவரின் திறமைகள் மேல் முழுமையான நம்பிக்கை இல்லை என்று சொல்வதும் முதல் 10 காரணங்களில் ஒன்றாக உள்ளது.

நோய்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளுதல் தனக்கு வந்திருக்கும் நோயின் தீவிரத்தை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டாமல் இருப்பதும் மற்றொரு காரணமாக உள்ளது. இது பின்வரும் காலங்களில் மிகவும் மோசமான விளைவுகளுக்கு காரணமாக இருக்க வாய்ப்புகள் உள்ளதால், நோய்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

செலவுகள் பெரும்பாலானவர்கள் சொல்லும் காரணமாக இருப்பது: ‘மருத்துவரைப் பார்க்கச் சென்றால், தேவையில்லாமல் செலவுகள் ஏற்படும்’ என்பது தான். பணத்தைச் சேமிப்பதும் மருத்துவரைப் பார்க்காமல் இருக்க சொல்லும் காரணங்களில் ஒன்றாக உள்ளது.

போதுமான நேரமில்லை! இது ஒரு நொண்டிச்சாக்கு என்று நீங்கள் நினைத்தாலும், பெரும்பாலானவர்கள் மருத்துவரை முறையாக சென்று பார்க்காமல் இருக்க, அவர்களுக்கு போதுமான நேரம் இல்லாததும் ஒரு காரணமாகும். எனவே, உங்களுக்கு ஏதாவது நோய் ஏற்பட்டால், எப்படியாவது மருத்துவரைப் பார்த்து விடுங்கள்.

சிறப்பு மருத்துவரா!? சிறப்பு மருத்துவரா! யார் அவர்? என்று கேட்பவர்கள் நம்மில் பலரும்! ஒரு இடத்திற்கு புதிதாக நீங்கள் வந்தவராக இருந்தால் இதையும் தகுந்த காரணமாக எடுத்துக் கொள்ளலாம். எனினும், உங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் அல்லது அருகில் வசிப்பவர்களின் உதவியை நீங்கள் கேட்கலாம். ஏனெனில், சரியான மருத்துவர் யாரென்று தெரியாமல் உங்களுடைய உடலை வருத்திக் கொள்ள வேண்டாம்.

மருத்துவர்கள் தங்களுடைய உடலை தொடக்கூடாது நோயாளிகளின் உடலை தொட்டுப் பார்க்காமல் உடலை பரிசோதனை செய்வது என்பது முடியாத செயல். எனினும், இந்த விஷயத்தின் காரணமாக மருத்துவரைப் பார்ப்பதில் அதிகம் தயக்கம் காட்டுபவர்கள் பெண் நோயாளிகளே, ஆண்களுக்கு இதுப்போன்ற எண்ணங்கள் பொதுவாக ஏற்படுவதில்லை. அதே சமயம், பெண் மருத்துவர்களைப் பார்க்கும் போது, பெண்களுக்கு இந்த தயக்கம் ஏற்படுவதில்லை

பரிசோதனை செய்து கொள்ள பயம் பரிசோதனைகள் செய்து கொள்வது பல்வேறு நபர்களுக்கும் அருவெறுப்பான விஷயமாகவும், வெறுப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். மேலும், இந்த பரிசோதனைகள் செய்து கொள்ள நேரமும் அதிகம் செலவாகும். இதன் காரணமாகவும் சிலர் மருத்துவர்களை பார்ப்பதில்லை.

அகால மரண பயம்! பெரும்பாலானவர்கள் தங்களை மருத்துவமனையில் அட்மிட் செய்து விட்டால், உயிரிழந்து விடுவோம் என்று நம்புகிறார்கள். இதுப்போன்ற விஷயங்கள் நடப்பதில்லை மற்றும் உண்மையில்லை என்ற போதிலும், இந்த மூடநம்பிக்கைகள் மற்றும் தவறான எண்ணங்களிலிருந்து மனிதர்கள் விடுபடவில்லை என்பதும் நிஜம். மருத்துவரை பார்க்காமல் இருக்க மனிதர்கள் சொல்லும் காரணங்களில் இதுவும் ஒன்று!

மருத்துவர்களின் இரக்கமில்லா குணம் மருத்துவர்களை பார்க்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் நோயாளிகள் கூறும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக இது உள்ளது. இந்த காரணத்தில் ஓரளவு உண்மையும் உள்ளது என்பதே இதன் பலம்! எனினும், உலகிலுள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் இது பொருந்தாது என்பது உலகறிந்த இரகசியம். எனவே, நண்பரைப் போலவும், பரிவுடனும் நடந்து கொள்ளக் கூடிய மருத்துவர்களை நீங்கள் தேடிக் கண்டறிந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!

18 1442552302 10 doctor

Related posts

முதுகு வலி விலகுமா?

nathan

பெண்களின் தாழ்வுநிலைக்கு அவர்களே காரணம்

nathan

குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா?

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்களை விட ஆண்களுக்கு கணைய புற்றுநோய் அதிகம் ஏற்பட காரணங்கள்

nathan

மார்பக விரிவாக்க க்ரீம் மற்றும் திரவ மருந்துகள் =தெரிந்துகொள்வோமா?

nathan

மூளைப் புற்றுநோய் பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியவை

nathan

தொடர்ச்சியான தும்மல் பிரச்சனையில் இருந்து, விடுவிக்கும் சில எளிய இயற்கை வழிகள்…

sangika

பெண்களின் குழந்தையின்மைக்கான பாதிப்புகளை கண்டறிவது எப்படி

nathan

உங்களுக்கு தெரியுமா கண்பார்வை குறைபாடு ஏன் உருவாகிறது? அதை சரிசெய்வது எப்படி?

nathan