25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
shutterstock 80379367 13143
மருத்துவ குறிப்பு

மூளை, நுரையீரல், இதயம், சருமம்… நலம் காக்கும் எலுமிச்சைத் தண்ணீர்!

எலுமிச்சை…
பழம்தான் சிறிது,
ஆனால்…
அதன் பலன் பெரிது – இது ஒரு கவிதை. `ஒரிஜினல் எலுமிச்சையை கார்/பைக் டயரில் வைத்து நசுக்கி விட்டு கெமிக்கல் ஜுஸை வாங்கிக் குடிக்கிறோம்’ என்று எங்கோ எழுதப்பட்ட வாசகம் இன்றைய யதார்த்தத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

எலுமிச்சை

எலுமிச்சை என்றதும், அதன் புளிப்புச்சுவைதான் நம் கண்முன் வந்து நிற்கும். ஆனால், அதன் பலன்கள் அதிகம் என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.

நம் உடலானது 60 சதவிகிதம் தண்ணீரால் உருவாக்கப்பட்டது. ஆனால், நாம் அதைச் சரியாகப் பாதுகாத்துக்கொள்ளும் அளவுக்கு தண்ணீர் அருந்துவதில்லை. இதைச் சரி செய்யவே, தினமும் காலையில் நாம் குடிக்கும் தண்ணீருடன் எலுமிச்சையைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். இதனால், உடலில் உள்ள செல்கள் புத்துணர்ச்சி பெறுவதுடன், உடலுக்கு வைட்டமின் சி, சிட்ரிக் அமிலம், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து போன்றவை கிடைக்கிறது. அத்துடன் இதில் நிறைய ஆக்சிஜனேற்ற தடுப்பான்களும் (Antioxidants) நிறைந்துள்ளன. தண்ணீருடன் எலுமிச்சையை நான்கு துண்டுகளாக நறுக்கிப்போட்டாலே புளிப்புச்சுவை கலந்து, புது சுவை கொடுக்கும். இதைத்தான் `எலுமிச்சைத் தண்ணீர்’ என்று சொல்கிறார்கள்.

லெமன் வாட்டர்

எளிய முறையில் செய்யக்கூடிய இந்த எலுமிச்சைத் தண்ணீரின் பலன்கள் என்னவென்று பார்ப்போம்.

ஆக்டிவ் பிரெயின்

எலுமிச்சைத் தண்ணீர் தலைவலியை குறைக்கும், மூளையில் உள்ள செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்து ஞாபகசக்தியை அதிகரிக்க உதவும். நாம் எந்த ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துகிறோமோ அதில் நன்றாக கவனம் செலுத்த உதவுகிறது.

துர்நாற்றத்தில் இருந்து விடுதலை

எலுமிச்சைத் தண்ணீர் குடித்தால், இது ஆன்டிசெப்டிக்காக செயல்பட்டு வாயில் உள்ள கெட்ட கிருமிகளை நீக்கி, துர்நாற்றத்திலிருந்து விடுவிக்கும். எப்போதும் வாயைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவும்.

இதயம், ரத்தத்தை சமநிலைப்படுத்தும்

எலுமிச்சை தண்ணீர் பருகி வந்தால் இதயக்கோளாறுகளில் இருந்து விடுபடலாம் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. எலுமிச்சையில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், அது உடலின் ரத்த அளவை சரியான அளவில் வைத்துக்கொள்ள உதவும். இதனால் ரத்த அழுத்தம் ஏற்படாது.

நுரையீரலைச் சுத்தம் செய்யும்

நுரையீரலில் படிந்துள்ள அழுக்கை அகற்றி, சுவாச மண்டலத்தை சுத்தம் செய்வதோடு தடையின்றி சுவாசிக்க உதவும்.

மிஸ்டர் க்ளீன் :

தினமும் காலை 500 மி.லி எலுமிச்சைத் தண்ணீர் அருந்தினால் செரிமானத் திறனை அதிகப்படுத்தும். அன்றைய நாள் முழுவதும் உத்வேகத்துடன் இருக்க உதவும். மேலும், உணவு செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தும், இதனால், மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளில் இருந்து விடுபடலாம். அதேபோல், கல்லீரலையும் சுத்தம் செய்து அதன் வேலைகளை செம்மையாகச் செய்ய உதவுகிறது.

சிறுநீரகக் கல்லுக்கு பை… பை…

தினமும் எலுமிச்சைத் தண்ணீர் குடித்து வந்தால் சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் தொற்று நோய்கள் நீங்கும்.

சருமம் காக்கும்

சருமத்துக்கு பாதுகாப்பு

எலுமிச்சைத் தண்ணீர் முகத்திலும் உடலிலும் உள்ள செல்கள் இளம் வயதில் முதிர்ச்சித் தன்மை அடைவதில் இருந்தும் சுருக்கத்தில் இருந்தும் பாதுக்காக்கும். எப்போதும் இளமையாக இருக்க உதவும். எலுமிச்சையை சருமங்களிலும் உடலிலும் தேய்த்துக்கொண்டால் பூச்சிகளின் தொந்தரவுகளைத் தவிர்க்கலாம்.

வலிக்கு மருந்து

உடலில் உள்ள மூட்டுகளில் ஏற்படும் வலிகளை நீக்கும், காய்ச்சலைக் குறைக்கும். உடலின் வெப்பத்தை சரியான அளவில் பாதுகாக்கும்.

மனதுக்கு ஆறுதல் தரும்

தினமும் காலை காபி குடிப்பதற்குப் பதிலாக மிதமான சூட்டில் எலுமிச்சைத் தண்ணீரைக் குடித்து வந்தால் மனதுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். அதோடு, நம்மை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவும் உதவும். ஆக, உடலில் நடக்கும் வளர்சிதை மாற்றத்தில் எலுமிச்சை பெரும்பங்கு ஆற்றுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, நோய்களுக்கு எதிராகப் போராட உதவுகிறது. இதிலுள்ள 4 கலோரிகள் உடலில் உள்ள ஆக்சிஜன் அளவை சரியான முறையில் வைத்துக் கொள்வதுடன் உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக வாழ வழிசெய்கிறது.

அப்படியென்றால், எலுமிச்சைத் தண்ணீரைத் தவிர்க்க மாட்டீர்கள்தானே?shutterstock 80379367 13143

Related posts

உங்களுக்கு தெரியுமா மூக்குல இந்த மூலிகை சாறை விட்டா கோமாவுல இருக்கறவங்கள கூட பிழைக்க வெக்க முடியுமாம்

nathan

குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆபத்தானதா? ‘வாட்ஸ் அப்’ விஷமமும், மருத்துவர்களின் விளக்கமும்!

nathan

குழந்தை வெளியே வரும்போது பிறப்புறுப்பில் என்ன நடக்கும் தெரியுமா?அப்ப உடனே இத படிங்க…

nathan

குழந்தை பிறக்கும் தேதி தள்ளிப்போனால் என்னாகும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

ஞாபகமறதி நோய் ( தொடர்ச்சி)

nathan

வேலைக்கு போகும் பெற்றோரால் குழந்தைகள் மனதில் ஏற்படும் தனிமை

nathan

தெரிஞ்சிக்கங்க… அடிக்கடி முதுகு வலிக்குதா? அப்ப உங்க உடம்புல இந்த சத்து கம்மியா இருக்குன்னு அர்த்தம்…

nathan

தோல் நோய் குணமாக…

nathan

கருப்பை பிரச்சனையை போக்கும் டயட்

nathan