25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201706021041146528 Women do not have menstrual periods SECVPF
மருத்துவ குறிப்பு

பெண்களுக்கு இன்னல் தரும் மாதவிடாய் வராத நிலை

மாதவிலக்கு இப்படி இரண்டு விதங்களிலும் பெண்களுக்கு இன்னல் தரக்கூடியது. அதிக ரத்தப் போக்கு எப்படி ஆபத்தானதோ, அதைவிட மோசமானது மாதவிடாய் வராத நிலை.

பெண்களுக்கு இன்னல் தரும் மாதவிடாய் வராத நிலை
வந்தாலும் இம்சை… வராவிட்டாலும் இம்சை… மாதவிலக்கு இப்படி இரண்டு விதங்களிலும் பெண்களுக்கு இன்னல் தரக்கூடியது. அதிக ரத்தப் போக்கு எப்படி ஆபத்தானதோ, அதைவிட மோசமானது மாதவிடாய் வராத நிலை. ‘அமெனோரியா’ எனப்படுகிற அந்த நிலை குறித்த தகவல்களை, அறிகுறிகள், தீர்வுகளோடு பார்க்கலாம்.

மாதவிலக்கு வராத நிலையை ‘அமெனோரியா’ என்கிறோம். தொடர்ந்து 3 மாதவிடாயைத் தவற விட்டவர்களுக்கும், 15 வயதுக்கு மேலாகியும் பூப்பெய்தாத பெண்களுக்கும் அமெனோரியா பிரச்சனை இருக்கலாம். காரணங்கள்…

பல்வேறு காரணங்களினால் இந்தப் பிரச்சனை வரலாம். பெண்களின் வாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் இயல்பாக நடக்கும் நிகழ்வாகவும் இருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனைக்காக அவர்கள் எடுத்துக் கொள்கிற மருந்துகளின் பக்க விளைவாலும் நிகழலாம். கர்ப்பகாலம், தாய்ப்பால் ஊட்டும் காலம் மற்றும் மெனோபாஸ் காலங்கள் போன்றவை இயல்பானவை.

கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வோருக்கும் மாதவிடாய் வராமல் போகலாம். மாத்திரைகளை நிறுத்திய பிறகும், அந்த சுழற்சி முறைப்பட சில நாட்கள் ஆகும். உடலுக்குள் பொருத்தப்பட்ட கருத்தடை சாதனங்களும் இதற்கு ஒரு வகையில் காரணமாகலாம்.மனநல சிகிச்சைக்கான மருந்துகள், புற்றுநோய்க்கான கீமோதெரபி மருந்துகள், ரத்த அழுத்த மருந்துகள், அலர்ஜி மருந்துகள் போன்றவற்றை எடுத்துக் கொள்கிறவர்களுக்கும் மாதவிடாய் தற்காலிகமாக வராமல் இருக்கலாம். வாழ்க்கை முறை மாறுதல்கள்…

சிலர் பருமனைக் குறைக்கிறேன் என்கிற பெயரில் சராசரியை விடவும் மிகக் குறைவான எடைக்கு வருவார்கள். அது அவர்களது ஹார்மோன் அளவுகளைப் பெரிதும் பாதித்து, அதன் விளைவாக மாதவிடாய் வராமல் செய்யும்.அதே போல அளவுக்கதிமாக உடற்பயிற்சி செய்கிறவர்களும் இந்த நிலையை சந்திக்கலாம். மிகக் குறைவான உடல் கொழுப்பு, அளவுகடந்த உடல் உழைப்பு, மன அழுத்தம் போன்ற காரணங்களால்தான் விளையாட்டுத் துறையில் ஈடுபடுகிற பெரும்பாலான பெண்கள் இந்தப் பிரச்சனையை சந்திக்கிறார்கள்.

மன அழுத்தத்துக்கும் மாதவிடாய்க்கும் கூட மிக நெருங்கிய தொடர்புண்டு. மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ் பகுதிதான் மாதவிடாய்க்குக் காரணமான ஹார்மோன்களை கட்டுப்படுத்துகிறது. அதீத மன அழுத்தம் ஏற்படுகிற போது, மாதவிடாயும் கரு உருவாதலும் தற்காலிகமாக தடைப்படலாம்.இவை தவிர…

பிசிஓஎஸ் எனப்படுகிற பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (சினைப்பை நீர்க்கட்டிகள்) பிரச்சனை உள்ளவர்களுக்கும், அளவுக்கதிகமாகவோ அல்லது குறைவாகவோ சுரக்கும் தைராய்டு சுரப்பிக் கோளாறு உள்ளவர்களுக்கும், பிட்யூட்டரி சுரப்பியில் கட்டிகள் உள்ளவர்களுக்கும் கூட மாதவிடாய் நின்று போகலாம்.

திருமணமான பெண்களுக்கு இந்தப் பிரச்சனை இருந்தால், அது அவர்களது கருத்தரிப்பைப் பாதிக்கும். ஈஸ்ட்ரோஜென் சுரப்புக் குறைபாட்டினால் மாதவிடாய் வராமலிருந்தால், அது ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படுகிற எலும்புகள் மென்மையாகிற பிரச்சனைக்கு வழி வகுக்கலாம்.

என்னென்ன சோதனைகள்?

மாதவிடாய் வராமலிருக்க, கர்ப்பம் தரித்திருப்பது காரணமா என்பதை உறுதிப்படுத்துகிற சோதனை.-தைராய்டு சுரப்பிகள் சரியாக இயங்குகின்றனவா என்பதற்கான ரத்தப் பரிசோதனை.

– சினைப்பைகள் சரியாக இயங்குகின்றனவா என்பதை அறிய ரத்தத்தில் எஃப்.எஸ்.ஹெச் (FSH ), புரோலாக்டின் என்கிற ஹார்மோன் அளவுக்கான சோதனை போன்றவை அவசியம். கூடவே மருத்துவர் அவசியம் என நினைத்தால், ஸ்கேன் சோதனையையும் வலியுறுத்துவார்.

தீர்வுகள் :

காரணத்தைக் கண்டறிந்த பிறகு அதற்கான சரியான மருந்துகள் பரிந்துரைக்கப்படும். சிலருக்கு ஹார்மோன் சிகிச்சைகள் உதவும். தைராய்டு அல்லது பிட்யூட்டரி சுரப்பிகள் தொடர்பான பிரச்சனைகள் என்றால், அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கட்டி போன்ற அரிதான காரணங்களுக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம். பிரச்சனையின் தீவிரம் பொறுத்து மருத்துவர் அதைப் பரிந்துரைப்பார்.

சிலர் பருமனைக் குறைக்கிறேன் என்கிற பெயரில் சராசரியை விடவும் மிகக் குறைவான எடைக்கு வருவார்கள். அது அவர்களது ஹார்மோன் அளவுகளைப் பெரிதும் பாதித்து, அதன் விளைவாக மாதவிடாய் வராமல் செய்யும்.201706021041146528 Women do not have menstrual periods SECVPF

Related posts

சோம்பல் விடுப்போம்… சுறுசுறுப்புடன் வாழ்வோம்.

nathan

பிரசவத்திற்கு பின் பயன்படுத்தும் பிரத்யேக நாப்கின்களை இதற்கும் பயன்படுத்தலாம்!தெரிஞ்சிக்கங்க…

nathan

மாலை அல்லது இரவில் கர்ப்ப பரிசோதனை செய்யலாமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் வெந்தயம்

nathan

பெற்ற பின் பெல்ட் அணிவது சரியா ?

nathan

ரத்த குழாய் அடைப்பு நீங்க இயற்கையான முறையில் குணம் பெற வழிமுறைகள்

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கான காரணங்களும்… விளைவுகளும்…

nathan

காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்காமல் இருக்கிறீர்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

அடிக்கடி டர்ர்..புர்ர்..ன்னு விடுறவங்களா நீங்க? உங்களுக்குதான் இந்த விஷயம்…

nathan