28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
sl1685
அசைவ வகைகள்

இறால் குழம்பு செய்வது எப்படி?

என்னென்ன தேவை?

இறால் – முக்கால் கிலோ

சின்ன வெங்காயம் – 50 கிராம்

தக்காளி – 1

புளி – 50 கிராம்

குழம்பு பொடி – 3 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – சிறிதளவு

நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு

வெந்தயம் – கால் டீஸ்பூன்

பூண்டு – பல்

எப்படிச் செய்வது?

வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் சேர்த்துத் தாளியுங்கள். பிறகு உரித்துவைத்துள்ள சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள். சுத்தம் செய்து வைத்துள்ள இறால்களை அதில் போட்டு நன்றாக வதக்குங்கள். வதங்கியதும் குழம்பு பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். பச்சை வாசனை போனதும் புளிக் கரைசலை ஊற்றி, சிறு தீயில் பத்து நிமிடம் கொதிக்கவையுங்கள். குழம்பு நன்றாகக் கொதித்ததும் எண்ணெய் தனியாகப் பிரிந்துவரும். இதுவே சரியான பதம். அப்போது சிறிதளவு கொத்தமல்லி தூவி இறக்கிவையுங்கள்.sl1685 1

Related posts

சிக்கன் லிவர் மசாலா ஃப்ரை

nathan

சுவையான இறால் புளிக்குழம்பு

nathan

செட்டிநாட்டு முந்திரி சிக்கன் கிரேவி

nathan

வறுத்தரைச்ச மீன் குழம்பு

nathan

சூப்பரான முட்டை மஞ்சூரியன்

nathan

சிக்கன் சால்னா: பேச்சுலர் ரெசிபி

nathan

சுறா புட்டு

nathan

மாசி கருவாட்டு தொக்கு செய்வது எப்படி…..

sangika

புதினா சிக்கன் குழம்பு

nathan