tJq1Etw
கேக் செய்முறை

கூடை கேக்

என்னென்ன தேவை?

பேப்பர் கப்ஸ் – தேவைக்கு,
மைதா – 125 கிராம்,
சர்க்கரை – 125 கிராம்,
வெண்ணெய் – 100 கிராம்,
பைனாப்பிள் எசென்ஸ் – 2 டீஸ்பூன்,
சிறிய சைஸ் முட்டை – 4,
பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்,
(தேவையானால்) பால் – 50 மி.லி.,
பொடித்த நட்ஸ் – 100 கிராம்,
பொடித்த ஸ்ட்ராபெரி – 100 கிராம்.

அலங்கரிக்க…

பட்டர் கிரீம், விப்பிங் கிரீம்-தேவைக்கு.

சர்க்கரை – 100 கிராம்,
வெண்ணெய் -100 கிராம்,
வெண்ணிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்,
பால் – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

முட்டையையும், சர்க்கரையையும் மிக்சியில் நன்கு அடிக்கவும். ஓர் அகலமான பாத்திரத்தில் வெண்ணெயை கைகளால் நன்கு தேய்க்கவும். இத்துடன் மைதா, எசென்ஸ், பேக்கிங் பவுடர் கலந்து, முட்டை+சர்க்கரை கலவையை சிறிது சிறிதாக ஊற்றி கட்டியில்லாமல் நன்கு பிசையவும். தேவையானால் பால் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கலந்து, நட்ஸ், ஸ்ட்ராபெரி சேர்த்து, பேப்பர் கப்பில் பாதியளவிற்கு ஊற்றி, 200 டிகிரி செல்சியஸில் 10 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்யப்பட அவனில், 15-20 நிமிடங்கள் 150 டிகிரி செல்சியஸில் பேக் ெசய்யவும். ஆறியதும் பட்டர் கிரீம், விப்பிங் கிரீம் கொண்டு அலங்கரித்து பரிமாறவும். குழந்தைகளுக்கு விருப்பமானது.tJq1Etw

Related posts

ஸ்பெஷல் பேரீச்சம்பழ கேக்

nathan

தேங்காய் கேக்

nathan

வாழைப்பழ கேக்

nathan

உலர் பழ கேக் (Dry Fruit Cake)

nathan

பேரீச்சம்பழக் கேக்

nathan

முட்டையில்லா வனிலா மைலோ கேக்/ Egg less Vanilla-Milo Marble Cake

nathan

பேக்டு அலாஸ்கா

nathan

பச்சை பட்டாணி கேக்: ஆரோக்கியமான சிற்றுண்டி செய்முறை

nathan

மைதா  ஃப்ரூட்  கேக்

nathan