23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1488271782 1368
அசைவ வகைகள்

ஆட்டுக்கால் பாயா செய்ய வேண்டுமா?….

தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கால் – 6
பெரிய வெங்காயம் – 2
பெரிய தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2தேவையான அளவு
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
ஏலம், பட்டை, கிராம்புத்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரைடீஸ்பூன்
தனியாத்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
நல்ல எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு

அரைக்க தேவையான பொருட்கள்:

மிளகு – 1 டேபிள்ஸ்பூன், சீரகம் – 1 டேபிள்ஸ்பூன், பெருஞ்சீரகம் (சோம்பு) – 1 டீஸ்பூன், தனியாத்தூள் – 1 டேபிள்ஸ்பூன், தேங்காய் 1 துண்டுகள், முந்திரி 6 இவற்றை லேசாக வறுத்து எடுத்து அரைத்துக் கொள்ளவும்.

1488271782 1368

செய்முறை:

ஆட்டுக்காலை முதலில் வேக வைக்க வேண்டும். முதலில் குக்கரில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின்பு சுத்தம் செய்து துண்டாக்கிய ஆட்டுக்காலைப் போடவும். 3 அல்லது 4 விசில் வைத்து எடுக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும், இஞ்சி பூண்டு பேஸ்ட் கரம் மசாலா சேர்த்து வதக்கவும். சிறிது நறுக்கிய கொத்தமல்லி, கறுவேப்பிலை, புதினா சேர்க்கவும். தக்காளி, மஞ்சள் தூள் சேர்க்கவும். தேவையான அளவு மிளகாய்த்தூள், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.

பின்பு குக்கரில் வேக வைத்த ஆட்டுக்காலை சேர்க்கவும். உப்பு மற்றும் அரைத்த தேங்காய் மிளகு மசாலாவைச் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்து பாயா தயார் ஆனவுடன் இறக்கி சிறிது நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Related posts

ஸ்பானிஷ் முட்டை ஆம்லெட்

nathan

வேலூர் மட்டன் ‘தம்’ பிரியாணி செய்வது எப்படி

nathan

சில்லி சிக்கன் கிரேவி

nathan

ஆ‌ட்டு‌க்க‌றி தொ‌க்கு

nathan

சிக்கன் குருமா

nathan

இறால் சாதம்

nathan

சிக்கன் மிளகு கறி

nathan

ஆம்லெட் போடும் போது மஞ்சள் கருவின் நிறம் எவ்வாறு உள்ளது என பார்க்க வேண்டுமாம்….

sangika

சுவையான மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா

nathan