நம் வீட்டு சமையலறையில் உள்ள பேக்கிங் சோடா அற்புதமான பண்புகளைத் தன்னுள் கொண்டது. இதனால் இது பல்வேறு வழிகளில் உபயோகமாக உள்ளது. அதில் வீட்டைச் சுத்தம் செய்வது, சமையல், உடல்நலம் மற்றும் அழகு போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இக்கட்டுரையில் பேங்கிங் சோடாவைக் கொண்டு ஓர் அற்புத ஃபேஸ் மாஸ்க் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள், கருவளையங்கள் மற்றும் எளிதில் நீங்கா கருமைகளை விரைவில் போக்கி, பிரகாசமான சருமத்தைப் பெற உதவும். இப்போது அந்த ஃபேஸ் மாஸ்க் குறித்து காண்போம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்: எலுமிச்சை – 1/2 பேக்கிங் சோடா – 2 டேபிள் ஸ்பூன் டீ-ட்ரீ ஆயில் – 2 துளிகள்
செய்முறை #1 முதலில் ஒரு பௌலில் பேக்கிங் சோடாவைப் போட்டு, அத்துடன் எலுமிச்சையைப் பிழிந்து, டீ-ட்ரீ ஆயிலையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
செய்முறை #2 பின்பு தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை முகத்தில் தடவி 3 நிமிடம் ஊற வைக்க வேண்டும். மறுமுறை இந்த ஃபேஸ் பேக்கைப் போடும் போது 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
செய்முறை #3 பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள், இந்த மாஸ்க் உடன் சிறிது நீரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
நன்மைகள் இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை போட்டால், சருமத் துளையின் ஆழத்தில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்படுவதோடு, இறந்த செல்களும் வெளியேற்றப்பட்டு, சருமம் புத்துணர்ச்சியுடனும், பிரகாசமாகவும் இருக்கும். இந்த ஃபேஸ் மாஸ்க்கில் உள்ள டீ-ட்ரீ ஆயில் பிம்பிள், முகப்பரு போன்றவற்றைப் போக்க வல்லது. எலுமிச்சை சாறு, பருக்களால் வந்த தழும்புகளை மறைக்கும்.