31.4 C
Chennai
Thursday, Jul 3, 2025
t37SyF6
இனிப்பு வகைகள்

ஓமானி அல்வா

என்னென்ன தேவை?

கார்ன்ஃப்ளோர் – 1 கப்,
பிரவுன் சுகர் – 1 கப்,
சர்க்கரை – 1/2 கப்,
கலந்த நட்ஸ் – 1 கப்,
நெய் – 1/2 கப்,
ஏலக்காய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்,
குங்குமப்பூ – 10 துண்டுகள்,
தண்ணீர் – 2½ கப்,
ரோஸ் வாட்டர் – 3 டீஸ்பூன்,
ஜாதிக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்,
ஆரஞ்சு, சிவப்பு ஃபுட் கலர் – தேவைக்கு,
வெள்ளை எள் – 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

குங்குமப்பூவை, 1/2 கப் தண்ணீரில் ஊறவைக்கவும். கார்ன்ஃப்ளோர் மாவை 1 கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும். பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்புகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் ஒரு அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் பிரவுன் சுகர், சர்க்கரை, மீதியுள்ள 1 கப் தண்ணீர் சேர்த்து கிளறி, மேலே படியும் அழுக்கை ஸ்பூனால் எடுத்து விடவும். தண்ணீர் கொதித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கார்ன்ஃப்ளோர் கலவை, ஃபுட் கலர் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

சிறிது கெட்டியானதும் ஏலக்காய்த்தூள், சிறிது நெய் விட்டு கிளறவும். பின் ஊறவைத்துள்ள குங்குமப்பூ, ரோஸ் வாட்டர், ஜாதிக்காய் தூள் சேர்த்து மீதியுள்ள நெய்யை ஊற்றி நன்கு கிளறவும். கலவை மேலும் கெட்டியானதும் பாதாம், பிஸ்தா, முந்திரி, வெள்ளை எள் சேர்த்து நெய் தனியாக பிரிந்து அல்வா பதத்திற்கு பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் இறக்கி அலங்கரித்து பரிமாறவும்.t37SyF6

Related posts

மாலை நேர ஸ்நாக்ஸ் தேங்காய் பால் பணியாரம்

nathan

சுவையான பீட்ரூட் அல்வா

nathan

கருப்பட்டி நெய்யப்பம்

nathan

பாதுஷா

nathan

சூப்பரான கண்டென்ஸ்டு மில்க் கஸ்டர்டு ரெசிபி

nathan

முட்டை வட்லாப்பம் : செய்முறைகளுடன்…!

nathan

ஆஹா பிரமாதம்- மைசூர் பருப்பு தால் செய்வது எப்படி

nathan

ரம்ஜான் ஸ்பெஷல்: அராபிய சிறப்பு இனிப்பு வகைகள்

nathan

சுவையான பால் கொழுக்கட்டை ரெடி…

sangika