27.8 C
Chennai
Friday, Mar 13, 2026
p32a
மருத்துவ குறிப்பு

தூக்கம் காக்கும் 10 வழிகள்!

ஆரோக்கியமான தூக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வது ஒருவரது வாழ்க்கைத் தரத்தையே மேம்படுத்தும். ஆனால், இன்று லட்சக்கணக்கான இந்தியர்கள் தூக்கத்தைத் தொலைத்த வாழ்வை வாழ்ந்து வருகின்றனர். நல்லவேளையாக, ஆரோக்கியமான தூக்கத்துக்கான பல வழிமுறைகள் உள்ளன.

*இரவு தூக்கம்தான் நல்லது. பகலில் சாப்பிட்ட பிறகு 20 நிமிடங்களுக்குத் தூங்கலாம். ஆனால், நீண்ட நேரம் தூங்கக் கூடாது. பகலில் தூக்கம் வரும்போது, முடிந்தால் சிறிய நடை செல்லுங்கள்; ஒரு டம்ளர் தண்ணீர் பருகுங்கள்; உங்களுக்குப் பிடித்தமானவருக்கு போன்செய்து பேசுங்கள். பகல் தூக்கத்தைத் தவிர்த்தாலே, இரவில் நல்ல தூக்கம் வரும்.
*அதிகத் தடிமன் உள்ள தலையணையும் வேண்டாம்; மிகவும் மென்மையான தலையணையும் வேண்டாம். மிதமான தடிமன் உள்ள, பருத்தியாலான தலையணைகளைத் தேர்ந்தெடுங்கள். தலையணை உறையை அடிக்கடி மாற்றுங்கள். படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்கட்டும்.
*இரவு மிதமான, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு உணவுக்குப் பின்னர் காபி, டீ, சாக்லேட் அறவே வேண்டாம். இவற்றில் உள்ள காஃபைன் தூக்கத்தை விரட்டும். மூளையைப் பாதிக்கும்.
*உடற்பயிற்சி செய்யும்போது, உடல் முழுவதும் சோர்வு அடையும். அது நல்ல தூக்கத்துக்கு வழிவகுக்கும்.
*எலெக்ட்ரானிக் திரைகளில் இருந்து வெளியேறும் நீலவண்ண ஒளி, உங்கள் தூக்கத்தைப் பாதிக்கும் இயல்புடையது. எனவே, தூங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னரே, டி.வி., கம்ப்யூட்டர், டேப்லெட், செல்போனை அணைத்துவிட வேண்டும்.
*படுக்கை என்பது தூங்க மட்டுமே என்கிற கொள்கையைப் பின்பற்றுங்கள். படுக்கையில் அமர்ந்து லேப்டாப்பில் வேலை பார்ப்பது, குழந்தையின் ஹோம்வொர்க் செய்வது, டி.வி பார்ப்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
*முதுகுவலி உள்ளவர்கள், காலுக்கு இடையே தலையணையை வைத்துத் தூங்க முயற்சிக்கலாம். இதனால், முதுகுவலியால் தூக்கம் பாதிக்கப்படுவது தடுக்கப்படும்.
*கழுத்தை சரியான நிலையில்வைத்துத் தூங்கவேண்டியது அவசியம். படுத்துக்கொண்டு டி.வி பார்க்கக் கூடாது. கழுத்து வலி ஏற்படக்கூடும். முடிந்தவரை படுக்கை அறையில் தொலைக்காட்சிப் பெட்டியை வைக்க வேண்டாம்.
*புகையும் மதுவும் தூக்கத்தை மட்டும் அல்ல, உடல்நலத்தையே அழிக்கும் தீய பழக்கங்கள். மதுவின் போதையில் மயங்கிக்கிடப்பது தூக்கம் அல்ல. மதுவால், ஆழமான தூக்கத்தைக் கொடுக்க முடியாது. மேலும், புகையும் மதுவும் நரம்பு மண்டலத்தைப் பாதித்து ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
*உடலின் கடிகாரத்தைச் சீராக்குங்கள். சாப்பிடுவது, படுக்கைக்குச் செல்வது, எழுவது என அனைத்தையும் அன்றாடம் குறிப்பிட்ட நேரத்தில் செய்வதை வழக்கமாக்குங்கள். நேரத்திலேயே உறங்கி நேரத்திலேயே எழும் பழக்கத்தை உருவாக்குங்கள்.p32a

Related posts

மாதவிடாய் பெரும்போக்கு கட்டுப்படுத்த!

nathan

சிறுநீர் பரிசோதனை செய்யப் போகிறீர்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

பித்தப்பை கற்கள் – தெரிந்து கொள்ள வேண்டிவை

nathan

அடிக்கடி புளித்த ஏப்பம் வருவது புற்றுநோயின் அறிகுறியா?

nathan

உங்கள் கவனத்துக்கு கர்ப்ப காலத்தில் லெமன் ஜூஸ் குடிக்கலாமா?

nathan

உங்கள் கவனத்துக்கு கல்லீரல் ஆபத்தான நிலையில் உள்ளது என்பதற்கான அறிகுறிகள்!

nathan

நீங்கள் முருங்கை விதைகளை சாப்பிட்டால் என்னாகும்?தெரியுமா ?

nathan

தெரிஞ்சிக்கங்க…உடலில் கட்டிகள் வருவதற்கான காரணம் என்ன?

nathan

கருப்பை நீர்கட்டியால் ஏற்படும் வலியை குணப்படுத்த சூப்பர் டிப்ஸ்..!

nathan