28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
11 3
அசைவ வகைகள்

மட்டன் க்ரீன் கறி… காரம் தூக்கல்… ருசி அதைவிட தூக்கல்!

11

வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ… வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது  வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான ‘மட்டன் கிரீன் கறி’ அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி.
தேவையானவை:
மட்டன் – அரை கிலோ
பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 100 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
சோம்பு  – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் –  5
கொத்தமல்லித்தழை – அரை கட்டு
தேங்காய்த் துருவல் – 50 கிராம்
உப்பு – தேவையான அளவு
வினிகர் – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – 30 மிலி
செய்முறை:
மட்டனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். தேங்காயுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும். சோம்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையை சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் நறுக்கிய வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கிய பின் அதனுடன் மட்டனை சேர்த்து வதக்கி, உப்பு,  அரைத்து வைத்திருக்கும் மசாலாவைச் சேர்த்து, பச்சை வாசனை நீங்கி மசாலாவிலிருந்து எண்ணெய் பிரிந்து மேலே வரும் வரை வதக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.
அடுப்பில் இருக்கும் மட்டன் கலவையுடன் வினிகர் மற்றும் தேவையான அளவு சுடுநீர் சேர்த்து நன்கு வேகவிடவும். மட்டன் நன்கு வெந்தவுடன் தேங்காய் விழுது சேர்த்துக் கலக்கி, அடுப்பை சிறு தீயில் வைத்து கலவையை வேகவிடவும். பின்னர் கரம் மசாலாத்தூள் சேர்த்து கிளறிவிட்டு, குழம்பு தயார் ஆனதும் அடுப்பிலிருந்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.
மட்டன் கிரீன் கறி… சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை உள்ளிட்ட எல்லா வகை உணவுகளுக்கும் பொருத்தமாக இருக்கும்[/url].
பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லித்தழையை அதிகமாகப் பயன்படுத்துவதால் குழம்பு பச்சை நிறத்தில் இருக்கும். அதனால்தான் இந்த டிஷ்ஷுக்கு மட்டன் கிரீன் கறி எனப் பெயர்.
குறிப்பு:
காரம் கூடுதலாக விரும்பினால் பச்சை மிளகாயை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

Related posts

சிக்கன் பாப்கார்ன்

nathan

சூப்பரான காரைக்குடி நண்டு மசாலா

nathan

செட்டிநாடு மீன் வறுவல்

nathan

முந்திரி சிக்கன் கிரேவி செய்முறை விளக்கம்

nathan

ஸ்பைசியான நண்டு வறுவல் செய்வது எப்படி

nathan

ஆட்டுக்கால் பாயா

nathan

சூப்பர் நண்டு வறுவல்

nathan

மீன் பிரியாணி

nathan

முந்திரி சிக்கன் கிரேவி

nathan