25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
1485329751 9397
சைவம்

கேப்ஸிகம் கிரேவி செய்ய வேண்டுமா….

தேவையான பொருட்கள்:

உருளைக் கிழங்கு – 3
கேப்ஸிகம் – 5
வெங்காயம் – 2

அரைக்க தேவையான பொருட்கள்:

தக்காளி – 1
வெங்காயம் – 1
பூண்டு – 5 பல்
சீரகம் – அரை டீஸ்பூன்
இஞ்சி – சிறிதளவு
மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
லவங்கம் – 3

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து உறித்து துண்டங்களாகச் செய்து கொள்ளவும். அரைக்கக் கொடுத்தவைகளை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

கேப்ஸிகத்தை சிறிய துண்டங்களாகச் செய்துகொள்ளவும். வெங்காயத்தையும் நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் லவங்கம், வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்த விழுதைக்கொட்டி சுருள வதக்கவும்.

கேப்ஸிகம் சேர்த்து சிறிது வதக்கி, வேகவைத்த கிழங்கு துண்டுகளை, சேர்த்து பிறகு, உப்பு, காரம், மஞ்சள்பொடி, ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

கிரேவி சற்று கெட்டியாகும் வரை கொதிக்கவைத்து இறக்கவும். இன்னும் காரம் தேவைப்பட்டால் காரத்திற்கு பச்சை மிளகாயும் சேர்க்கலாம். இதையும் விருப்பமான சப்பாத்தி, பூரி முதலானவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.1485329751 9397

Related posts

பாகற்காய் தக்காளிப் புளிக்கறி

nathan

வெஜிடபிள் கறி

nathan

தக்காளி குழம்பு

nathan

சூப்பரான சைடிஷ் கத்திரிக்காய் வறுவல்

nathan

கோவைக்காய் அவியல்

nathan

சூப்பரான தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி

nathan

சம்பா கோதுமை புலாவ்

nathan

காய்கறி கதம்ப சாதம்

nathan

அரிசி ரவை கீரை கொழுக்கட்டை

nathan