24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
masala 3112035f
அசைவ வகைகள்

நாட்டுக்கோழி மசாலா

என்னென்ன தேவை?

நாட்டுக்கோழிக்கறி – அரை கில

சின்ன வெங்காயம் – 20

தக்காளி – 2

இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன

மஞ்சள் தூள் – சிறிதளவ

உப்பு, நல்லெண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவ

வறுத்து அரைக்

காய்ந்த மிளகாய் – 18

மல்லி – 3 டீஸ்பூன

சோம்பு, மிளகு – தலா ஒரு டீஸ்பூன

தாளிக்க

பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை – சிறிதளவ

கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவ

எப்படிச் செய்வது?

அரைக்கக் கொடுத்துள்ளவற்றைச் சிறிதளவு எண்ணெயில் தனித்தனியாக வறுத்து, ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். கறியை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அலசி குக்கரில் போட்டு உப்பு, மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து ஐந்து விசில் விட்டு இறக்கிவையுங்கள். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. ஆறு சிறிய வெங்காயத்தை எண்ணெயில் வதக்கி தனியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளியுங்கள். அதில் வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து சிவக்க வதக்குங்கள். பிறகு தக்காளியைச் சேர்த்து கரையும்வரை வதக்குங்கள். வறுத்து அரைத்த மசாலா, அரைத்த வெங்காயம் சேர்த்து வதக்கி, வேகவைத்த கறியைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்குங்கள். பிறகு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, உப்பு சரிபார்த்து மிதமான தீயில் கொதிக்கவிடுங்கள். மசாலா கெட்டியானவுடன் மல்லித்தழை தூவி இறக்கிவையுங்கள்.masala 3112035f

Related posts

உருளைக்கிழங்கு ஆம்லெட்

nathan

உங்களுக்கு சுவையான இறால் 65 செய்ய வேண்டுமா…?

nathan

சிக்கன் ரோஷ்ட்

nathan

சமையல் குறிப்பு: பொரித்த மீன்! ~ பெட்டகம்

nathan

சுவையான மட்டன் குடல் குழம்பு

nathan

அயிரை மீன் குழம்பு

nathan

மட்டன் குருமா

nathan

சுறா புட்டு செய்ய…!

nathan

சிம்பிளான… கடாய் பன்னீர்

nathan