27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
computer vccc3
மருத்துவ குறிப்பு

நீங்கள் உடைத்தெறிய வேண்டிய 13 கெட்ட பழக்கங்கள்!

1. தோன்றும் போதெல்லாம் வலைதளங்களை அலசுதல்

நம்மில் பலருக்கும் இன்று விரல்நுனியில் இணைய வசதி இருப்பதால் மனதில் சிறு கேள்வி உதித்தால் கூட செய்யும் வேலையை அப்படியே போட்டுவிட்டு ‘சர்ச்’ செய்ய ஆரம்பித்துவிடுகிறோம். இவ்வகையான தேடல்கள் நேரத்தை விரயமாக்கி, நம் வேலையையும் பாதிக்கும்.

இதை தவிர்க்க, வேலை நேரத்தில் தோன்றும் கேள்விகளையெல்லாம் ஒரு நோட்பேடில் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டால், ஓய்வு நேரத்தில் இந்த ஆற்றல் நிறைந்த தேடலில் ஈடுபடலாம்.

2. ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது

இது பெரிய திறமை எனக் கருதி நம்மில் பலரும் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகள் செய்வதுண்டு. ஆனால் அறிவியல் ஆராய்ச்சியின்படி 2% மக்களே இந்த மல்டி டாஸ்க்கிங்கில் சிறப்பாக செயல்படுவதாக கூறப்படுகிறது.

மற்றவர்கள் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என அநாவசிய சாகசங்களைக் குறைத்தால் சிறப்பாக செயல்பட முடியும்.

3. மெசேஜ், ஈமெயில் ஏதும் வருகிறதா என ஓயாமல் கவனிப்பது

இது ஒரு வகையான மயக்கமாகவே மாறிவிட்டது. இந்தப் பழக்கம் வேலையை மட்டுமல்ல மனநிலையையும் பாதிப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

4. நமக்கு நாமே காரணம் தேடிக் கொள்ளுதல்

ஒரு வேலையை தொடர்ந்து செய்ய வேண்டும் என முடிவு செய்திருப்போம். ஆனால் அதை மறந்தால் அதற்கு நமக்கு நாமே காரணம் சொல்லிக்கொண்டு, எடுத்த செயலை அப்படியே விட்டுவிடுவோம். தினமும் அதிகாலை எழ வேண்டும் என்ற நம் புத்தாண்டு உறுதிமொழி போல. இப்படி நாம் காரணங்கள் சொல்லி கழட்டிவிட்ட காரியங்களே பெரிய தடை.

computer vccc3

5. அநாவசிய சந்திப்புகள்

ஆன்-லைனிலேயே பல வேலைகளை முடிக்கும் அட்வான்ஸ்டு டெக்னாலஜி காலத்தில், தேவையில்லா நேரடி சந்திப்புகளை குறைத்துக் கொள்ளலாம். தெளிவில்லாத சந்திப்புகள் தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும்.

6. ஒத்திவைத்தல்

அப்புறம், பிறகு, நாளை என தள்ளிப்போட்டு பல காரியங்கள் ஒரேயடியாகக் காணாமல் போன கதைகள் உண்டு. அதேபோல் சுலபமான வேலைகளை முதலில் முடித்துவிட்டு கடினமானதை கடைசியில் செய்வோம் எனவும் மறந்துவிடுவோம். இது தவிர்க்க வேண்டிய முக்கியப் பழக்கம்.

7.ஒரே இடத்தில் ஆணி அடித்தது போல் உட்கார்ந்திருப்பது

வீடோ அல்லது அலுவலகமோ ஒரே இடத்தை தேய்க்காமல் அவ்வப்போது சிறிது தூரம் காலார நடப்பது, கணினித் திரையை விட்டு கண்களுக்கு ஓய்வு கொடுப்பது நல்ல புத்துணர்ச்சியைத் தரும்.

computer vccc4

8. முக்கியத்துவம் அளித்தல்

நிறைய குறிக்கோள்கள் இருப்பதில் தவறில்லை. ஆனால் அவைகளின் முக்கியத்துவம் உணர்ந்து செயல்படுவது வாழும் நாட்களை அர்த்தமுள்ளதாக்கும்.

9. கண்விழித்த பிறகும் படுக்கையில் சுருண்டு கிடப்பது

படுக்கையில் ‘இன்னும் 5 நிமிஷம்’ என்று கேட்பவர்களில் பெரும்பாலானோருக்கு அப்பழக்கம், கூடுதல் எனர்ஜி, மேம்பட்ட சிந்தனை என கேட்பதில் இருப்பதில்லை. நிறைவான இரவுத் தூக்கமும் அதிகாலை கண்விழிப்பும் சிறந்ததொரு நாளைத் தரும்.

10. ஓவர் ப்ளானிங் உடம்புக்கு ஆகவே ஆகாது

லட்சிய வெறி கொண்டோர் ஒரு நிமிஷத்தைக் கூட வீணாக்கமாட்டேன் என்ற பெயரில் தீவிரமாகப் ப்ளான் போட்டு செயல்படுவர். தங்கள் திட்டத்தில் சின்ன தடங்கள் ஏற்பட்டால் கூட சோர்ந்துவிடுவார்கள். இது பெரிய தடை.

computer vccc5

11.திட்டமிடல் இல்லாமை

எந்த திட்டமும் இல்லாமல் வாழ்க்கையில் போகிற போக்கில் வென்றிவிட முடியாது. இந்த எல்லையும் ஆபத்தானதே. லட்சியமில்லா வாழ்க்கை சுவாரஸ்யமற்றதாகிவிடும்.

computer vccc6

12. செல்போனை கட்டி அழுதல்

LED ஸ்கிரின்கள் கொண்ட செல்போன், லேப்டாப் போன்றவை வெளியிடும் ஒளி கண் திரையை பாதிக்கக்கூடியவை. தூங்கும் போது கூட செல்போனை தலைமாட்டில் வைத்து தூங்குவோர் தான் அதிகமாக மன அழுத்தத்தில் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

13. மிஸ்டர்.பெர்ஃப்க்ட்

எல்லா காரியத்திலும் நேர்த்தியை எதிர்பார்ப்போர் செயல்படுவதைக்காட்டிலும் வேலையை தள்ளிப்போடுபவராகவே உள்ளனர். நேர்த்தி எல்லா விஷயத்திலும் கிடைத்துவிடாது. எல்லாராலும் மிஸ்டர்.பெர்ஃப்க்ட் ஆக முடியாது. வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்.

computer vccc7

மேலே உள்ள விஷயங்களை கடைபிடித்தால் உங்களது முன்னேற்றத்தை நீங்களே உணருவீர்கள்!

Related posts

உங்கள் மனைவியின் டென்ஷன் குறைக்கும் ‘இரண்டு மந்திரங்கள்’ என்ன தெரியுமா?

nathan

கல்யாண முருங்கை இலையில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கா? நம்ப முடியலையே…

nathan

உங்களுக்கு தெரியுமா தமிழர்களின் ஆயுர்வேதத்தின் படி பழங்களை இந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாதாம்…

nathan

உங்களுக்கு தெரியுமா உச்சி முதல் பாதம் வரையுள்ள நோய்களை குணப்படுத்தும் அரும்பெரும் மருந்து வில்வம்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பெற்றோராக தயாராகி கொண்டிருபவர்களுக்கான சில முக்கியமான டிப்ஸ்…

nathan

சிலருக்கு தோல் நோய் வந்து உயிரை எடுக்கும்… மன உளைச்சல் அதிகமாக இருக்கும். இதோ, உடனடி தீர்வு…..!!…

nathan

ஆண் அல்லது பெண் குழந்தையை விரும்பும் பெண்களுக்கான உணவுகள்

nathan

பெண்கள் மட்டும் பார்க்கவும்! வெந்தயத்தை அரைத்து மார்பில் தடவினால் போதும்!

nathan

உங்களுக்கு தெரியுமா காலை எழுந்ததும் இந்த பானத்தை குடித்தால் நாள் முழுதும் ஆரோக்கியமாக இருக்கலாம்!

nathan