24.4 C
Chennai
Tuesday, Jan 14, 2025
fhfdhfhf
மருத்துவ குறிப்பு

தம்பதியினரின் உடல் பிரச்சனைகளே குழந்தையின்மை முதற்காரணம்

ஆண்களுக்கு ஹார்மோன் குறைபாடு, உடல் பருமன், நீண்ட கால புகைப்பழக்கம், மதுப்பழக்கம் மற்றும் ஆண்மைக் குறைவு பிரச்னைகள், உயிரணுக்கள் குறைந்தோ அல்லது இல்லாமலோ இருப்பது, அவற்றின் அசையும் திறன் குறைந்திருப்பது, உருவ அமைப்பு குறைபாடு, சர்க்கரை வியாதி மற்றும் மரபுரீதியான நோய்களால் ஏற்படும் குறைபாடுகள், உளவியல் காரணங்கள், உறுப்பில் குறைபாடு மற்றும் நோய்த் தொற்று போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்னை உண்டாகும்.
பெண்களுக்கு கருக்குழாய் அடைப்பு, கருப்பை வளர்ச்சியின்மை, கருப்பைக் கட்டிகள், முட்டை வெளியேறுவதில் பிரச்னை, சினைப்பை, கருப்பையில் என்டோமேட்ரியோசிஸ் பிரச்னை, ஹார்மோன் குறைபாட்டால் கருமுட்டை உற்பத்தி பாதிப்பு, கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பினால் உண்டாகும் நோய்கள், உடல் பருமன், சர்க்கரை, ரத்த கொதிப்பு, தைராய்டு பிரச்னை போன்ற காரணங்களால் குழந்தைப் பேறு தடைபடலாம். ஆண்மை குறைபாடு மற்றும் உயிரணு குறைபாடுகளை மருந்துகளை கொண்டு சரி செய்ய முடியும்.

ஆண்களுக்கு உயிரணு பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட், ஹார்மோன் பரிசோதனை குறைபாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். மாதவிலக்கு குறைபாடுகள் உள்ள பெண்கள் முன்கூட்டியே பரிசோதிக்கலாம். ஆண், பெண் இருவருமே அதிக உடல் எடையைக் குறைப்பது மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு முறைப்படி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். குறைபாட்டுக்கு ஏற்ற சிகிச்சை முறையால் குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு காணலாம்fhfdhfhf

Related posts

லவ்வர் வேணுமா… மருந்து சாப்பிடுங்க…

nathan

ஏ.சி.யில் வளரும் உடலியல் சார்ந்த பல பிரச்சினைகள்

nathan

ஆண் பெண் பாகுபாடு அற்ற நட்பு சரியா தவறா?

nathan

பயணமும் சட்டமும் பாதுகாப்பை தருகிறதா?

nathan

டீடாக்ஸ் எனும் நச்சு நீக்கம்… ஏன்? எப்போது? யாருக்கு?

nathan

முதுகுத் தண்டுவடத்தை வலுப்படுத்து இலகுவான ஆசனம்!முயன்று பாருங்கள்…

nathan

உள்காய்ச்சல் ஏறுதா?

nathan

சிறுநீரை அடக்குபவரா நீங்கள்? பாதிப்புக்கள் என்ன?

nathan

தெரிந்துகொள்வோமா? மூக்கு, தொண்டை பகுதி வரை சென்ற வைரஸை வெளியேற்றுவது எப்படி?

nathan