30.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
1AF1U3V
சிற்றுண்டி வகைகள்

நட்ஸ் டிரைஃப்ரூட்ஸ் ரிச் லட்டு

என்னென்ன தேவை?

கடலை மாவு – 1 கப்,
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்,
சிறு துண்டுகளாக உடைத்த முந்திரி,
காய்ந்த திராட்சை, பாதாம்,
கற்கண்டு – 1/2 கப்,
எண்ணெய் – தேவைக்கு,
லெமன் மஞ்சள் ஃபுட் கலர் – சிறிது,
பொடித்த அத்திப்பழம்,
பேரீச்சம்பழம் – தலா 1 அல்லது 2,
சர்க்கரை – 2 கப்,
குங்குமப்பூ – சிறிது.

எப்படிச் செய்வது?

கடலை மாவு, அரிசி மாவு, ஃபுட் கலர், தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து பூந்தி கரண்டியால் மாவை ஊற்றி தேய்க்கவும். பூந்தி பொரிந்து வந்ததும் வடித்து வைக்கவும். அதே எண்ணெயில் பாதாம், முந்திரி, திராட்சையை பொரித்து தனியாக வைக்கவும். சர்க்கரையில் 1/2 முதல் 3/4 கப் தண்ணீர் விட்டு இளம் பாகாக காய்ச்சி, குங்குமப்பூ, வறுத்த நட்ஸ், பொடித்த டிரைஃப்ரூட்ஸ், கற்கண்டு, ஏலக்காய்த்தூள், இத்துடன் பொரித்த பூந்தி அனைத்தையும் சேர்த்து புரட்டவும். இக்கலவை சூடாக இருக்கும்போதே முடிந்த அளவு, கையில் நெய் தடவிக் கொண்டு உருண்டைகள் பிடிக்கவும். கலவை ஆறிவிட்டால் சிறிது சூடு செய்து சுடச்சுட லட்டு பிடிக்கவும்.1AF1U3V

Related posts

சுவையான தினை உருளைக்கிழங்கு கட்லெட்

nathan

செம்பருத்தி பூ தோசை

nathan

சூப்பரான மினி சாம்பார் இட்லி செய்வது எப்படி

nathan

மாலை நேர டிபன் சேமியா கிச்சடி

nathan

ரெட் ரைஸ் வெஜ் மிக்ஸ்

nathan

சொஜ்ஜி

nathan

அரைத்து செய்யும் பஜ்ஜி

nathan

ப்ராக்கோலி கபாப்

nathan

ராஜஸ்தான் ஸ்பெஷல் தால் டோக்ளி

nathan