32.5 C
Chennai
Wednesday, Jun 26, 2024
201705151307405992 dondakaya bath Tindora masala bath kovakkai masala bath SECVPF
சிற்றுண்டி வகைகள்

கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி

கோவைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இன்று கோவைக்காயை வைத்து சூப்பரான மசாலாபாத் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி – ஒரு கப்,
கோவைக்காய் – 200 கிராம்,
கரம் மசாலாத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
கடுகு – அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
வறுத்த முந்திரி – சிறிதளவு,
எண்ணெய், நெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* கோவைக்காயை நீளவாக்கில் வெட்டிகொள்ளவும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பாசுமதி அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

* குக்கரில் எண்ணெய், நெய்விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் கோவைக்காய், தேங்காய்த் துருவல், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

* பிறகு அதில் ஊறவைத்த அரிசி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.

* விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து வறுத்த முந்திரி, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.

* சூப்பரான கோவைக்காய் மசாலாபாத் ரெடி.
201705151307405992 dondakaya bath Tindora masala bath kovakkai masala bath SECVPF

Related posts

குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் கட்லெட்

nathan

வாழைத்தண்டு துவையல் செய்வது எப்படி

nathan

ராஜ்மா சாவல்

nathan

சேனைக்கிழங்கு சுக்கா

nathan

சத்தான சம்பா கோதுமை ரவை அடை

nathan

குழந்தைக்கு விருப்பமான சிக்கன் கொத்துக்கறி வடை

nathan

வெஜிடேபிள் அவல் கட்லெட்

nathan

வாழை இலை கொழுக்கட்டை

nathan

கடலைப் பருப்பு போளி

nathan