சிற்றுண்டி வகைகள்

ஹைதராபாத் ஸ்பெஷல் ஆனியன் சோட்டா சமோசா

தியேட்டர்களில் கோக்கும் பெப்சியும் பாப்கார்ன் மெஷினும் காபி மேக்கரும் நுழையாத காலம். இடைவேளை வரும் முன்பே கதவு அருகே அவர்கள் கொண்டுவந்து வைக்கும் தின்பண்டங்களின் வாசனை மூக்கைத் துளைக்கும். சூடான போண்டா, பப்ஸ், வெங்காய சமோசா…

வெங்காய சமோசா – ஆசியாவின் பிரபல சிற்றுண்டியான இதற்கு, 1300 ஆண்டுகளுக்கு முன்பே அரச குடும்பங்களில் பரிமாறப்பட்ட வரலாறு உண்டு. ஆசியக்கண்டம் முழுதும் பலவித வடிவங்களில் பரவியுள்ளது. பெரும்பாலும் இஸ்லாமிய பயணிகளால் பயணத்தின் போது எடுத்து செல்லப்பட்டு பரப்பப்பட்டிருக்கிறது. போர்ச்சுகல், இந்தோனேஷியா, மாலத்தீவு, பாகிஸ்தான், பர்மா , நேபாளம், பங்களாதேஷ் பகுதிகளில் சமோசா பல்வேறு வடிவங்களிலும் பெயர்களிலும் பரவியிருக்கிறது. வட இந்திய நகரங்களில் பலரது காலை உணவே சமோசாதான். காரணம்… சமோசாவில் பொதுவாக ஸ்டஃப்பிங் எனப்படும் பூரணம் உருளைக்கிழங்கு சேர்த்த மசாலாவாகவே இருக்கும். இது ஆற்றல் அளிக்கக்கூடியது ஆயிற்றே!

டெல்லியில் கரோல்பாக் வீதிகளில் பெரிய தடிமனான தோசைக்கல்லில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சமோசாக்களும் ஜிலேபிகளும் குலோப் ஜாமூன்களும் கண்ணைக் கட்டி, பசியைத் தூண்டும். பஞ்சாபி சமோசா என்னும் அளவில் பெரிய சமோசாக்கள் உள்ளே உருளைக்கிழங்கு, பட்டாணியுடன் காரமான மசாலா நிரப்பி, பேரீச்சை சட்னி, புதினா சட்னியுடன் பரிமாறப்படும். ஒரு சமோசாவும் ஒரு ஜிலேபி அல்லது ஜாமூனுமே மதியம் வரை பசி தாங்க வைக்கும்.

ஹைதராபாத் பிரியாணிக்கு மட்டுமல்ல… சமோசாவுக்கும் புகழ்பெற்றது. இங்கு கிடைக்கும் லுக்மி எனும் சதுர சமோசா இறைச்சி நிரப்பப்பட்டது. சார்மினாரை ஒட்டியுள்ள பகுதிகளில் பெரிய கூடைகளில் அழகிய முக்கோண வடிவில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள சமோசாக்களை நீங்கள் கவனித்திருக்கலாம். பஞ்சாபி சமோசாவை விட, இந்த முக்கோண சமோசா ருசியானது. சின்னச் சின்ன முக்கோணங்கள் மனதைக் கொள்ளை கொள்ளும். எத்தனை சாப்பிட்டாலும் இன்னும் சாப்பிடலாமே என்று நினைக்க வைக்கும் சிற்றுண்டிகளில் இதுவும் ஒன்று.

செய்வது மிக எளிது. ஒரு முறை செய்து காற்று புகாத கவரில் போட்டு ஃப்ரீசரில் வைத்தால் வாரக்கணக்கில் கெடாது. மேல்மாவு மட்டும் தயார் செய்து, பாதி சமைத்து, ஜிப் லாக் கவரில் போட்டு வைத்து தேவைப்படும் போதும் செய்யலாம். மைதா, கோதுமை மாவு சேர்த்து பூரணமாக வெங்காயம் வைத்து முக்கோண வடிவில் எண்ணெயில் பொரித்து எடுப்பதுதான் ஹைதராபாத் ஆனியன் சோட்டா சமோசா எனப்படும் இந்த புகழ்பெற்ற உணவு. எதுவானாலும் எண்ணெயில் இரு முறை பொரித்தெடுத்தால் சுவையும் மொறுமொறுப்பும் வண்ணமும் கூடும். இந்த சமோசாவையும் நாம் இரு முறை பொரிக்க போகிறோம்.ld3887

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button