28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
201705121534088716 chettinad paal paniyaram SECVPF
செட்டிநாட்டுச் சமையல்

சூப்பரான ஸ்நாக்ஸ் செட்டிநாடு பால் பணியாரம்

பால் பணியாரம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அருமையான ரெசிபி. குழந்தைகளுக்கு விருப்பமான இந்த பால் பணியாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சூப்பரான ஸ்நாக்ஸ் செட்டிநாடு பால் பணியாரம்
தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 1/2 கப்
உளுந்தம் பருப்பு – 1/2 கப்
தேங்காய் பால் – 1 கப்
காய்ச்சிய பால் – 1/4 கப்
ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
முந்திரி, பாதாம் – தேவையான அளவு

201705121534088716 chettinad paal paniyaram SECVPF
செய்முறை :

* முந்திரி, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும். மாவானது கெட்டியாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவை கொஞ்சம் கொஞ்சமாக கையில் எடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, டிஷ்யூ பேப்பரில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* அடி கனமான பாத்திரத்திதல் தேங்காய் பால், காய்ச்சிய பால், ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

* கலந்த பாலில் பொரித்து வைத்துள்ள பணியாரத்தை சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.

* பரிமாறும் போது நறுக்கி வைத்துள்ள பாதாம் முந்திரியை தூவி கொடுக்கவும்.

* சுவையான செட்டிநாடு பால் பணியாரம் ரெடி!!!

Related posts

சுவையான காரமான கத்திரிக்காய் வறுவல்

nathan

செட்டிநாடு மீன் பிரியாணி,tamil samayal tips

nathan

செட்டிநாடு மட்டன் குழம்பு விரிவான செய்முறை

nathan

செட்டிநாடு காளான் மசாலா

nathan

சூப்பரான செட்டிநாடு இறால் குழம்பு

nathan

ருசியான… செட்டிநாடு சுழியம்

nathan

செட்டிநாடு மசாலா குழம்பு

nathan

செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்ய…!

nathan

செட்டி நாட்டு புளியோதரை

nathan