25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
Headache1 15389
மருத்துவ குறிப்பு

ஒற்றைத்தலைவலியைப் போக்க உதவும் 10 இயற்கை வழிமுறைகள்!

‘தலைவலியும் வயிற்றுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்’ என்பார்கள். இந்த வாசகத்தில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பது அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். ஒற்றைத்தலைவலி… மகா வேதனை! அந்த வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மரபியல் காரணங்கள், பருவநிலை மாற்றம், அதிக நெடியுள்ள வாசனை, மனஅழுத்தம், தூக்கமின்மை, பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்புக் குறைவது… என ஒற்றைத்தலைவலிக்கான பட்டியலில் காரணங்களும் அதிகம். எனவே, ஒற்றைத்தலைவலிக்கு இதுதான் காரணம் எனக் குறிப்பிட்டும் சொல்ல முடியாது. `இதைக் குறைக்க மாத்திரை, மருந்துகள் இருந்தாலும், சில உணவு முறைகளையும் வழிமுறைகளையும் பின்பற்றினால் சரிசெய்ய முடியும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். அந்த இயற்கை வழிமுறைகளைப் பற்றி விவரிக்கிறார் சித்த மருத்துவர் ரமேஷ்…
Headache1 15389
ஒற்றைத்தலைவலி

ஆளி விதை

உடலில் தொற்றுநோய் அல்லது காயங்களால் ஏற்படும் கட்டிகள், வீக்கம் போன்றவையும் ஒற்றைத்தலைவலி ஏற்பட காரணமாக உள்ளன. இது போன்ற பிரச்னைகளால் ஏற்படும் ஒற்றைத்தலைவலிக்கு ஆளி விதை மிகச் சிறந்த நிவாரணம் தரும். இதில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி அமிலங்கள் (Omega-3 fatty acid) இதற்கு துணைபுரிகின்றன. இந்த விதை உணவை எண்ணெயாகவோ அல்லது உணவில் சேர்த்தோ சாப்பிடலாம்.

ginger 15249
இஞ்சி

இஞ்சி

ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படும் இஞ்சி, தலைவலியைக் குணப்படுத்தும் தன்மையுடையது. நாள்பட்ட வீக்கம், வலி போன்றவற்றால் ஏற்படும் தலைவலியைப் போக்கும் ஆன்டி-இன்ஃப்ளாமேட்டரியை (Anti-inflammatory) கொண்டுள்ளது. எனவே, தலைவலிக்கும்போது, இஞ்சி ரமேஷ்டீயாக தயார் செய்து குடிக்கலாம். சாப்பிடும் உணவில் சிறிது இஞ்சியைச் சேர்த்து சாப்பிட்டால், தலைவலியைக் குறைக்கலாம்.

புராக்கோலி

உடலில் மக்னீசியம் தாதுச்சத்தின் அளவு குறையும்போது, தசைகள் தளர்வடைந்து தலைவலி ஏற்படும். புராக்கோலியில் மக்னீசியம் சத்து அதிகமாக உள்ளதால், இதைச் சமைத்து சாப்பிட்டுவந்தால், தலைவலி குறையும். புராக்கோலியை வேகவைத்து, அத்துடன் சிறிது மிளகுத் தூள் மற்றும் உப்பை சேர்த்தும் சாப்பிடலாம்.

p37s 16133 15077
மீன்

மீன் உணவுகளில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் வைட்டமின்கள் நிறைவாக உள்ளன. இவற்றைச் சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா-3, ஒற்றைத்தலைவலியைக் குணப்படுத்தும்.

கீரைகள்

கீரைகள்

கீரைகளில் மக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. இவை ஒற்றைத்தலைவலியை குணப்படுத்தும் தன்மையுடையது என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பெண்களுக்கு மாதாவிடாய் காலத்தில் ஏற்படும் இந்தத் தலைவலிக்கு மிகச்சிறந்த நிவாரணி கீரை உணவுகள்.

தேன்

தேனில் பொட்டாசியம், மக்னீசியம் ஆகியவை நிறைவாக உள்ளன. இவை, மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். எனவே, தூங்கச் செல்வதற்கு முன்னதாகவோ, உணவு உண்பதுக்கு முன்னதாகவோ இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் சாப்பிடுவது இந்தத் தலைவலியைக் குறைக்க உதவும். அல்லது இரண்டு டேபிள்ஸ்பூன் தேனுடன் கால் டீஸ்பூன் லவங்கப்பட்டையை தண்ணீரில் கலந்து பருகலாம்.

தேன்
p8a 15443
துளசி எண்ணெய்

தசைகள் இறுக்கம் மற்றும் டென்ஷனால் உண்டாகும் ஒற்றைத்தலைவலியிலிருந்து விடுபட, துளசி எண்ணெய் மிகச் சிறந்த நிவாரணி, இதைத் தலையில் சூடு பறக்கத் தேய்த்தால் வலி குறையும்.

ஆவி பிடித்தல்

சூடான தண்ணீரில், லாவெண்டர் எண்ணெயை இரண்டு துளிகள் சேர்த்து ஆவி பிடித்தால் தலைவலி குறையும். இந்த எண்ணெயை தலையிலும் தேய்த்துக்கொள்ளலாம். ஆனால் உட்கொள்ளக்கூடாது. அதேபோல, மஞ்சள் 1 டீஸ்பூன், கல்லுப்பு 1 டீஸ்பூன், நொச்சியிலை 1 கைப்பிடி ஆகியவற்றை நீரில் வேகவைத்து ஆவி பிடித்தாலும் தலைவலி தீரும்.
tea2928 1 (1) 11058 17423 15520

டீ

டீ, காபி

தலைவலிக்கும் போது ஒரு கப் காபி குடித்தால், அதில் உள்ள `காஃபைன்’ என்னும் பொருள் தலைவலியைக் கட்டுப்படுத்தும். அல்லது கொத்தமல்லி, சுக்கு, மிளகு சேர்த்த டீ குடிக்கலாம்.

நீர்க்கோவை மாத்திரை

தலையில் நீர்கோர்த்துக்கொள்வதாலும் தலைவலி உண்டாகும். இதுபோன்ற தலைவலிக்கு நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நீர்க்கோவை மாத்திரைகளை வெந்நீருடன் சேர்த்து தலையில் பத்து போட்டுக்கொள்ளலாம்.

shutterstock 107514581 16412 15374

தலைவலி

இதைத் தவிர்த்து வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளித்தால், தலைவலி ஏற்படாமல் தவிர்க்கலாம். வயிற்றில் கழிவு தங்கியிருந்தாலும் தலைவலி ஏற்படும். எனவே, ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது அகத்தியர் குழம்பு, முறுக்கன் வித்து மாத்திரை போன்ற பேதி மருந்துகளை எடுத்துக்கொள்வது நல்ல தீர்வாக அமையும்.

கவனம்:

இந்த உணவுகள், வழிமுறைகளைப் பின்பற்றி தற்காலிகமாகத்தான் தலைவலியைக் குறைக்க முடியும். இது உண்டாவதற்கான காரணங்களை கண்டறிந்து, சிகிச்சை எடுத்தால் மட்டுமே நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.

Related posts

சிறுநீரக கற்கள் – Dr.க.சிவசுகந்தன்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் இரத்தக்கசிவு ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

nathan

தூக்கத்தை கெடுக்கும் மூக்கடைப்பு பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம்

nathan

உங்களுக்கு தெரியுமா ஏலக்காயை போட்டு கொதிக்க வைத்த நீரில் வாய் கொப்பளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

தெரிஞ்சிக்கங்க… வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க சில சூப்பரான கை வைத்தியங்கள்!!!

nathan

நச்சரித்துக் கொண்டே இருக்கும் பெண்களை விரும்பாத ஆண்கள்

nathan

லவ்வர் வேணுமா… மருந்து சாப்பிடுங்க…

nathan

விஷக்கடியை குணமாக்கும் பூவரசம் பூ

nathan

பெண்களே! உங்களால் ஆண்கள் சந்திக்கும் இக்கட்டான பிரச்சனைகள்!. திருந்துங்கம்மா!

nathan