28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
26 1482754108 scalp1
தலைமுடி சிகிச்சை

தலையில் உள்ள பொடுகை போக்க விளக்கெண்ணெயை உபயோகப்படுத்தும் முறைகள்!!

விளக்கெண்ணெயை பழங்காலமாக உபயோகப்படுத்துகிறோம். இது அரிய பல மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. இதனை வயிறு சம்பந்த நோய்கள் வராமல் காக்கவும், நச்சுக்களை வெளியேற்றவும் அந்த காலத்தில் வாரம் ஒரு முறை மருந்தாக எல்லாரும் உட்கொண்டார்கள்.

சற்றும் சளைக்காமல் அழகிற்கும் குறிப்பாக கூந்தல் வளர்ச்சிக்கும் இதனை உபயோகப்படுத்தினோம். விளக்கெண்ணெய் எந்த பிரச்சனையெல்லாம் போக்குகிறது என பார்க்கலாம்.

பொடுகிற்கு : வறண்ட சருமத்தினால் பொடுகு ஏற்படுகிறது. விளக்கெண்ணெய் மற்றும் நல்லேண்ணெயை சம அளவு எடுத்து அதில் இரண்டு மிளகு மற்றும் பூண்டை போட்டு பொறுக்கும் சூட்டில் சூடு படுத்துங்கள். இதனை வாரம் ஒரு நாள் தலைக்கு தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் பொடுகு மறையும்.

முடி உதிர்தலுக்கு : முடி உதிர்தலை தடுக்க விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் இரண்டும் அரை கப் அளவு எடுத்து அதனை முட்டையின் வெள்ளைக் கருவுடன் கலந்து தலைக்கு தடவி மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து குளிக்கவும்.

ஸ்கால்பில் உண்டாகும் தொற்று : விளக்கெண்ணெய் ஸ்கால்ப்பில் உண்டாகும் தொற்றை தவிர்க்கிறது. அதி பூஞ்சைக்கு எதிராக செயல்படுவதால் புழுவெட்டு, அரிப்பு, வெண்சொட்டை போன்ற தலையில் உண்டாகும் பிரச்சனைகளை போக்குவதால் வாரம் ஒரு நாள் விளக்கெண்ணெயை உபயோகப்படுத்தினால் பலன் பெறலாம்.

ஸ்கால்ப் பிரச்சனைக்கு விளக்கெண்ணெயை உபயோகப்படுத்தும் முறை : சம அளவில் தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் முடிக்கேற்ப எடுத்து நன்றாக கலக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இரவில் தூங்குவதற்கு முன் இந்த எண்ணெயை நன்றாக தலையில் த்டவி மசாஜ் செய்து இரவு முழுவதும் அப்படியே விடவும். மறு நாள் குளியுங்கள்.இவ்வாறு செய்யும்போது ஸ்கால்ப் சம்பந்தமான பிரச்சனைகள் மறைந்துவிடும்.

26 1482754108 scalp1

Related posts

எப்போது முடி நரைக்க தொடங்கும்

nathan

தலைக்கு சீகைக்காயைப் பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள்!!!

nathan

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க…

nathan

பொடுகு தொல்லைக்கு முடிவு கட்டும் தேங்காய் எண்ணெய்

nathan

உங்களுக்கு தெரியுமா ஷாம்புக்கு பதிலா இந்த ஒரு பொருள தேய்ச்சாலே முடி தாறுமாறா வளருமாம்!

nathan

தெரிஞ்சிக்கங்க…கோடையில் முடி கொட்டுவது எதனால் என்று தெரியுமா…?

nathan

மயக்கும் கூந்தலுக்கு… சில எளிய வழிகள்,நீண்ட கூந்தலுக்கான ரகசியம்

nathan

பொடுகை மாயமாக மறைய வைக்கும் சில கிராமத்து வைத்தியங்கள்!

nathan

கூந்தல் உதிர்வா? அடர்த்தி இல்லையா? இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க

nathan