25.9 C
Chennai
Thursday, Mar 12, 2026
201705111105416248 Curry leaves pepper rice SECVPF
சைவம்

இருமலை கட்டுப்படுத்தும் கறிவேப்பிலை மிளகு சாதம்

இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த சாதத்தை சாப்பிட்டால் தொண்டைக்கு இதமாக இருக்கும். இன்று கறிவேப்பிலை மிளகு சாதம் செய்முறையை பார்க்கலாம்.

இருமலை கட்டுப்படுத்தும் கறிவேப்பிலை மிளகு சாதம்
தேவையான பொருட்கள் :

கறிவேப்பிலை – ஒரு கப் + தாளிக்க
மிளகு – 2 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு,
கடுகு – அரை டீஸ்பூன்
உதிரியாக வடித்த சாதம் – ஒரு கப்,
நெய் – ஒரு டீஸ்பூன்,
கல் உப்பு – தேவையான அளவு,

செய்முறை :

* வாணலியில் மிளகை சேர்த்து, அடுப்பை ‘சிம்’மில் வைத்து, கருகிவிடாதபடி வறுக்கவும்.

* அடுத்து கறிவேப்பிலையை தனியாக வறுக்கவும்.

* பெருங்காயத்தை பொரித்து எடுக்கவும்.

* அடுப்பை நிறுத்தி, கடைசியில் கல் உப்பை போட்டு, வறுத்துக் கொள்ளவும்.

* அனைத்தும ஆறியதும் எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் போட்டு நைஸாக பொடி செய்யவும்.

* வாணலியில் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் சாதத்தை சேர்த்து, கறிவேப்பிலை – மிளகு பொடியைப் போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறி பரிமாறவும்.

* கறிவேப்பிலை மிளகு சாதம் ரெடி.

* இதை சூடாக சாப்பிட்டால், இருமல் நிற்கும். பசியையும் தூண்டும்.201705111105416248 Curry leaves pepper rice SECVPF

Related posts

குதிரைவாலி கொத்தமல்லி சாதம்

nathan

புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்

nathan

சீரகக் குழம்பு!

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் வெண்டைக்காய் சிப்ஸ்

nathan

வாழைப்பூ குருமா

nathan

பாரம்பரியம் பகரும் ஏழு காய் குழம்பு

nathan

வீட்டிலேயே செய்யலாம் பன்னீர் பஹடி

nathan

பக்கோடா குழம்பு

nathan

ராகி பூரி

nathan