என்னென்ன தேவை?
பச்சரிசி மாவு – 1 கப்,
தினை மாவு – 1 கப்,
பொடித்த வெல்லம் – 2 கப்,
ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்,
நெய், பொரிக்க,
எண்ணெய் – தேவைக்கு.
எப்படிச் செய்வது?
பச்சரிசி, தினை இரண்டையும் தனித்தனியே ஊறவைத்து உலர்த்தி மாவாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை, ஒரு கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மீண்டும் பாகு உருட்டும் பதம் வரும்போது இறக்கவும். தண்ணீரில் சிறிது பாகை விட்டால் முத்து போல் திரண்டு வரும். அப்போது பாகில் இரண்டு மாவையும் சிறிது சிறிதாக போட்டு நெய் விட்டு, கட்டியில்லாமல் கிளறி ஏலக்காய்த்தூள் சேர்த்து பிசைந்து மூடிவைத்து மறுநாள் இந்த மாவை சிறு உருண்டையாக எடுத்து இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து வட்டமாக தட்டி மிதமான சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து எண்ணெயை பிழிந்து வடித்தெடுத்து பரிமாறவும். குறிப்பு: மாவு தளர்வாக இல்லாமல் அளவு சரியாக இருக்க வேண்டும்.