24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
201705101519090721 ragi pakoda. L styvpf
சிற்றுண்டி வகைகள்

மாலை நேர ஸ்நாக்ஸ் கேழ்வரகு பக்கோடா

மாலையில் வீட்டில் உள்ளவர்களுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால் கேழ்வரகு பக்கோடா செய்து கொடுக்கலாம். இதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

மாலை நேர ஸ்நாக்ஸ் கேழ்வரகு பக்கோடா
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு – 100 கிராம்,
அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்,
தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 1
இஞ்சி – சிறிய துண்டு
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, தயிர், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி – கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கெட்டியாகக் கலக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை அதில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்துக் கொள்ளவும்.201705101519090721 ragi pakoda. L styvpf

* சூப்பரான சத்தான கேழ்வரகு பக்கோடா ரெடி.

Related posts

கோதுமை பிரட் முட்டை உப்புமா

nathan

உருளைக்கிழங்கு ஸ்டஃப்டு கீமா கபாப்

nathan

ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல்

nathan

தினை உப்புமா அடை

nathan

ராகி பால் கொழுக்கட்டை

nathan

வெல்லம் கோடா

nathan

மொறுமொறுப்பான சில்லி சீஸ் பஜ்ஜி

nathan

பிரெட் மோதகம்

nathan

வெஜிடபிள் பாட் பை

nathan