24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
miracle of human brain SECVPF
மருத்துவ குறிப்பு

மனித மூளைக்குள் நிகழும் அதிசயம்

மூளையில் ஹைபோ தலாமஸ்- பீனியல் சுரப்பி நடுவே மூக்கின் உச்சியின் பின்புறமாக அமைந்துள்ளது. மிக மெல்லிய ரத்த குழாய்களும், நரம்புகளும் இதனை மூளையுடன் இணைக்கின்றன.

மனித மூளைக்குள் நிகழும் அதிசயம்
பிட்யூட்டரி சுரப்பி:

பிட்யூட்டரி சுரப்பியினை தலைமை சுரப்பி என்று குறிப்பிடுவது உண்டு. காரணம் இது மற்ற சுரப்பிகளை கட்டுபடுத்துகின்றது. பல ஆய்வுகளின் முடிவு படி இச்சுரப்பி இல்லாவிடில் நம் உடலின் செயல்பாடுகள் இருப்பதே கடினம்.

இத்தனை மாபெரும் வேலையினைச் செய்யும் இச்சுரப்பியின் அளவு ஒரு பட்டாணி அளவுதான். மூளையில் ஹைபோ தலாமஸ்- பீனியல் சுரப்பி நடுவே மூக்கின் உச்சியின் பின்புறமாக அமைந்துள்ளது. மிக மெல்லிய ரத்த குழாய்களும், நரம்புகளும் இதனை மூளையுடன் இணைக்கின்றன. பல சுரப்பிகளை கட்டுப்படுத்தும் அதிபதியாக இது விளங்கினாலும் இதற்கு உத்தரவுகள் ஹைபோ தலாமஸ் பகுதியிலிருந்தே கிடைக்கின்றன. பொதுவாக இச்சுரப்பிகளுக்கு நீள செயின் இணைப்பு உண்டு. இதன் மூலம் அனுப்ப வேண்டிய கட்டளைகளை இவைகள் அனுப்பும்.

ஹைபோ தலாமஸ் பிட்யூட்டரிக்கு ஹார்மோன் மூலம் கட்டளைகள் இடும். அதன் படியே பிட்யூட்டரி மற்ற சுரப்பிகளுக்கு எவ்வளவு சுரக்க வேண்டும் என்ற கட்டளையினை அனுப்பும். இது மட்டுமல்லாது சில உறுப்புகளுக்காக சில ஹார்மோன்களையும் பிட்யூட்டரி உற்பத்தி செய்யும்.

* ஆக்ஸிடோஸின் என்ற ஹார்மோனால் குழந்தை பிறப்பினை கருப்பை சுருங்கி விரியச் செய்து பிறப்பினை ஏதுவாக்கும். பெண் மார்பகங்களில் பால் உற்பத்தி உருவாகும்.
* வளோ பெர்ஸின் என்ற ஹார்மோனை சிறு நீரகத்திற்காக உருவாக்கும்.
* என் டார்பின் என்ற ஹார்மோன் மூளை மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்காக உருவாக்கப்படுகிறது.

* வளர்ச்சி ஹார்மோன் தசை எலும்புகளுக்காக
* ப்ரோலக்டின்- தாய் பால் உற்பத்திக்காக என பல ஹார்மோன்களையும் உருவாக்குகின்றது. அநேக ஹர்மோன்கள் பகலில் உயர்நிலையிலும் இரவில் குறைந்த நிலையிலும் இருக்கும். சில ஹார்மோன்கள் மாதவிலக்கு மற்றும் அதன் சுழற்சி போன்றவற்றினை சுற்றி இருக்கும்.

ஹைபோதலாமஸ், பிட்யூட்டரியும் இணைந்து உடலுக்கு அனைத்து அத்தியாவசிய செயல்களையும் ஆற்றுகின்றன. உடல் சூடு, பசி, தாகம், சோர்வு, வளர்ச்சி, தூக்கம், எடை, தாம்பத்ய உறவு, வலி, நிவாரணம், ரத்த அழுத்தம், மன உளைச்சல், கோபதாபம் என அநேக செயல்களை செய்கின்றன. இந்த ஹைபோதலாமஸ் ஒரு பாதாம் பருப்பின் அளவு தான் இருக்கும். மேலும் ஹைபோதலாமஸ், பிட்யூட்டரியும் இணைந்து பீனியல் சுரப்பியினை ஊக்குவிக்கின்றன.

இதையெல்லாம் நான் எழுதுவதன் காரணம் இந்த மனித படைப்பின் அதிசயங்களை நீங்கள் அறிய வேண்டும் என்பதுதான். பீனியல் சுரப்பி மூளையின் நடுவில் பிட்யூட்டரி சுரப்பிக்கு பின்னும் மேலுமாக இருக்கின்றது. மனம், நோய் எதிர்ப்பு சக்தி, மன உளைச்சல், முறையான தூக்கம் இவை அனைத்திற்குமே பீனியல் சுரக்கும் மெலடோனின் பொறுப்பாகின்றது.

இவைகளை அடிப்படையாக வைத்துதான் நம் முன்னோர் புருவ மத்தியின் கவனத்தினை வைத்து தியானம் செய்யச்சொன்னார்கள்.

* பல வகை மூச்சுப்பயிற்சிகளின் மூலம் இவைகளை ஊக்குவித்து உடல் ஆரோக்கியத்தினை கூட்டினார்கள்.
* புருவ மத்தியில் மெதுவாக சில முறை தட்டச்சொன்னார்கள்.
* லேசான அழுத்தம் கொடுக்கச் சொன்னார்கள்.
* இரு கண்களை குவித்து புருவ மத்தியில் சில நொடிகள் பார்க்கச்சொன்னார்கள்.miracle of human brain SECVPF

Related posts

வயிறு உப்புசம் குறைக்கும் பாட்டி வைத்தியம்

nathan

உங்களுக்கு தெரியுமா உடல்சூடு, வயிற்றுவலிக்கு நிவாரணம் தரும் வெந்தயம்

nathan

பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர்த் தொற்றை எப்படி தவிர்க்கலாம்?

nathan

எந்த உணவு சாப்பிட்டாலும் புளிப்புத் தன்மையுடன் மேலே ஏப்பம் வருகிறது. இதோ உங்களுக்காக டிப்ஸ்.!

nathan

நோய்கள் வராமல் தடுக்கும்…வந்தாலும் விரட்டும்!மருந்து கஞ்சி

nathan

படிக்கத் தவறாதீர்கள்…கர்ப்பிணியின் வயிற்றில் ஆண் குழந்தை வளர்வதை சுட்டிக்காட்டும் அறிகுறிகள்!

nathan

இந்த அறிகுறி எல்லா உங்களுக்கு இருக்கா? உடனே டாக்டர பாருங்க!!!

nathan

திருநங்கைகளால் கருத்தரிக்க முடியுமா? உண்மை என்ன ?

nathan

கசகசாவில் இருக்கும் வியக்கத்தக்க டாப் 5 மருத்துவ குணங்கள்!!!

nathan