28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
201705081526240537 brinjal biryani Eggplant biryani SECVPF
சைவம்

சூப்பரான கத்திரிக்காய் பிரியாணி செய்வது எப்படி

கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட கத்தரிக்காய் வைத்து பிரியாணி செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த பிரியாணியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சூப்பரான கத்திரிக்காய் பிரியாணி செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி – 250 கிராம்,
வெங்காயம் – ஒன்று,
கத்திரிக்காய் – 100 கிராம்
தக்காளி – 3,
மிளகாய்த்தூள் – ஒன்றே கால் டீஸ்பூன்,
தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
புதினா – கறிவேப்பிலை – கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு,
இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் விழுது – ஒரு டீஸ்பூன், (அனைத்தும் சேர்த்து அரைத்து)
நெய் – 2 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லி, புதினா, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரிசியை அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும்.

* கத்திரிக்காயை வட்ட வட்டமாக நறுக்கி… மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து எண்ணெயில் பொரித்தெடுத்து வைத்துக் கொள்ளவும் (அல்லது தோசைக்கல்லில் போட்டு வறுத்தெடுக்கவும் செய்யலாம்).

* அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

* இஞ்சி – பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, வறுத்த வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து மேலும் வதக்கவும்.

* அனைத்தும் நன்றாக வதங்கியதும் அதில் பாதி கத்தரிக்காய் மசாலாவை எடுத்து விட்டு அரை வேக்காடாக வேக வைத்த சாதத்தில் பாதியை சேர்த்து நன்றாக கிளறி, அதன் மேல் எடுத்து வைத்துள்ள கத்தரிக்காய் மசாலாவை பரப்பி, எடுத்து வைத்துள்ள சாதத்தை அதன்மேல் பரப்பி, அதன்மேல் நெய் ஊற்றி, பாத்திரத்தை மூடி, அடுப்பை சிறிது நேரம் சிறு தீயில் வைத்து இறக்கி, கிளறி பரிமாறவும்.

* சூப்பரான கத்திரிக்காய் பிரியாணி ரெடி.
201705081526240537 brinjal biryani Eggplant biryani SECVPF

Related posts

தக்காளி பிரியாணி

nathan

சத்து நிறைந்த வேர்க்கடலை சாதம்

nathan

சூப்பரான ஹைதராபாத் வெஜ் பிரியாணி

nathan

உருளைக்கிழங்கு கைமா கபாப்

nathan

காலிஃபிளவர் கேரட் புலாவ்

nathan

வீட்டிலேயே செய்யலாம் கோவில் புளியோதரை

nathan

பூசணிக்காய் பால் கூட்டு

nathan

மாங்காய் சாதம்

nathan

காரசாரமான மொச்சை பொரியல் செய்வது எப்படி

nathan