தவறான பாதையில் சென்றுவிட்ட ஒரு குழந்தையைக் கையாளுவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. உண்மையைச் சொன்னால் சில பெற்றோர் தங்கள் பொறுமையையும், நம்பிக்கையையும் இதில் இழந்துவிடுவதும் கூட உண்டு. இதுப்போன்ற குழந்தைகள் பொதுவாக மிகவும் சத்தமாகப் பேசுவதும், கூச்சலிடுவதும் முரட்டுத்தனமாக நடப்பதும் இயல்பு. இவர்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட கீழ்படிதல் இல்லாத எதையும் அழிவின் பார்வையில் பார்ப்பவர்களாக இருப்பர்.
சரி, நமக்கு அதுப்போன்ற அணுகுமுறைகள் பிடிக்காது தான். ஆனால் நீங்கள் சற்று ஆழமாகப் பார்த்தால், ஒரு அடங்காத குழந்தைப் பெரும்பாலும் அமைதியற்ற குணமுடையவர்களேயன்றி வேறொன்றுமில்லை. உங்கள் குழந்தை உங்களிடம் சொல்ல நினைத்த ஏதோ ஒன்றை சொல்லத் தெரியாமல் தவறான வழிகளில் வெளிப்படுத்துகிறது. எனவே இவ்வாறான குழந்தைகளை எவ்வாறு கையாளுவது என்பதை மேற்கொண்டு பார்ப்போம்.
அவர்கள் சொல்வதை கேட்கவும் கவனிக்கவும் முயலுங்கள் முதலில், கீழ்படியாத குழந்தைகள் விரும்புவது ஒன்றுதான். அவர்கள் சொல்வதை செவிகொடுத்துக் கேட்பது என்பதுதான் அது. அவனோ அல்லது அவளோ சொல்ல நினைக்கும் ஒன்றை நீங்கள் கவனிக்கவும், கேட்கவும் வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் அதனைப் புறக்கணித்தால், அவர்கள் தங்கள் அணுகுமுறையில் மேலும் தீவிரம் காட்டக்கூடும்.
எதிர்க்காதீர்கள் அதுப்போன்ற குழந்தைகளைப் பார்த்து கூச்சலிடுவதோ அல்லது அடிப்பதோ நிலைமையை மேலும் மோசமாக்கவே செய்யும். அவர்கள் தங்கள் பிடிவாதத்தையும், சத்தத்தையும் அதிகப்படுத்தி பிரச்சனைக்களை அதிகரிக்கவே செய்வர்.
பொறுமையாக இருங்கள் அவர்களிடம் பொறுமையாகப் பேச்சுக் கொடுத்து, அவர்கள் கவனத்தைத் திசை திருப்ப முயலுங்கள். வேண்டுமானால் ஒரு இனிப்பையோ அல்லது சாக்லேட்டையோ கொடுத்து அவர்களை அமைதிப்படுத்துங்கள். ஆனால் அதனை வாடிக்கையாக்கிவிடாதீர்கள்.
அவர்களுக்கு அறிவுரை கூறி ஊக்கப்படுத்துங்கள் குழந்தை சற்று அமைதியானதும், அவ்வாறு நடந்து கொள்வது தவறான ஒன்று என்பதை விளக்குங்கள். அதுப்போன்ற கெட்ட நடத்தைகளால் விளையும் தீங்குகளை எடுத்துரைத்து, அவை சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது என்பதையும் உணர்த்துங்கள்.