sl4854
சிற்றுண்டி வகைகள்

அவல் உசிலி

என்னென்ன தேவை?

அவல் – 1 கப்,
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு,
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்,
வெல்லம் – 1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கேரட் – 1,
குடைமிளகாய் – 1/2, உப்பு,
எண்ணெய், கொத்தமல்லித்தழை – தேவைக்கு.

வறுத்துப் பொடிக்க…

தனியா – 1/2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் – 4,
பட்டை – 1 சிறிய துண்டு,
கிராம்பு -1.

தாளிக்க…

கடுகு – 1/2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 கொத்து.

எப்படிச் செய்வது?

புளியை 1/2 கப் தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். அவலில் வெல்லம், மஞ்சள்தூள், புளிக்கரைசலையும், தேவையான தண்ணீரையும் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற விடவும்வெறும் கடாயில் தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, பட்டை, கிராம்பு ஆகியவற்றை வறுத்துப் பொடிக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, கேரட், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். காய்கள் வெந்ததும் ஊறவைத்த அவல், உப்பு, வறுத்து அரைத்த பொடியை தூவி கிளறி இறக்கி, கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.sl4854

Related posts

கான்ட்வி

nathan

சிக்கன் நூடுல்ஸ்

nathan

சுவையான முருங்கை கீரை வடை……

sangika

பலாப்பழம் பர்பி

nathan

சுவையான… கீமா மொமோஸ்

nathan

கம்பு பாலக் கீரை தட்டு ரொட்டி

nathan

ரொட்டி வடை செய்வது எப்படி?

nathan

கடலைப் பருப்பு போளி

nathan

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் அச்சு முறுக்கு

nathan