25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
21 1482303391 7 turmeric face pack
முகப் பராமரிப்பு

7 நாட்களில் முகத்தில் இருக்கும் கருமையைப் போக்க வேண்டுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க…

என்ன தான் ஒருபக்கம் குளிர்காலமாக இருந்தாலும், மறுபக்கம் வெயில் கொளுத்திக் கொண்டு தான் உள்ளது. இதனால் சருமத்தின் நிறம் கருமையடைவதோடு, சரும செல்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, சருமம் சுருக்கமடைந்து, விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடுகிறது.

சருமம் கருமையடையாமல் பொலிவோடு இருக்க, சூரியக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து சருமத்திற்கு போதிய பாதுகாப்பை வழங்குவதோடு, சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டும். அதில் தினமும் சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர், சன்ஸ்க்ரீன் போன்றவற்றைப் பயன்படுத்துவதோடு, அவ்வப்போது ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

இங்கு சருமத்தில் உள்ள கருமை மற்றும் சுருக்கங்களை ஏழு நாட்களில் போக்கும் ஓர் அற்புத ஃபேஸ் பேக் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டெப் #1 முதலில் 1/4 கப் சாதத்தை நன்கு மசித்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். சாதத்தில் லினோலியிக் அமிலம், ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றவை உள்ளது. இது சருமத்தில் கொலாஜென் உற்பத்தியை மேம்படுத்தி, சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும்.

ஸ்டெப் #2 பின் மசித்து வைத்த சாதத்துடன், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கொள்ள வேண்டும். எலுமிச்சை சாற்றில் சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இது சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும்.

ஸ்டெப் #3 பின்பு அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #4 பின் அதோடு 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #5 இறுதியில் அதோடு, சிறிது தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #6
பிறகு சருமத்தில் சிறிது தண்ணீர் தெளித்து, சருமத்தை ஈரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #7 அடுத்து கலந்து வைத்துள்ள கலவையை, முகம், கழுத்து, கை, கால் போன்ற பகுதிகளில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, நன்கு காய வைக்க வேண்டும். மாஸ்க் நன்கு காய்ந்த பின், சிறிது நீரைத் தெளித்து, 10 நிமிடம் தேய்க்க வேண்டும்.

ஸ்டெப் #8 பின்பு வெதுவெதுப்பான நீரால் சருமத்தைக் கழுவி, பின் குளிர்ந்த நீரால் சருமத்தைக் கழுவி, துணியால் துடைத்து, மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.

குறிப்பு இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை போட்டு வந்தால், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சரும சுருக்கங்கள் நீங்கும்.

21 1482303391 7 turmeric face pack

Related posts

உங்க முகம் பத்தே நிமிடங்களில் புத்துணர்ச்சி பெற சில டிப்ஸ்

nathan

கொலாஜன் ஃபேஷியல்: collagen facial

nathan

படிக்கத் தவறாதீர்கள்! தினமும் லிப்ஸ்டிக் போடுவது நல்லதா?

nathan

முகம் மொழுமொழுவென்று இருக்கும் அழகோ.. அழகு…

nathan

முகத்தில் அசிங்கமா மேடு பள்ளங்கள் உள்ளதா? அதை மறைக்க இதோ சில அற்புத வழிகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா பருக்களினால் ஏற்பட்ட வடுக்களை சரி செய்ய இந்த அரிய வகை மூலிகைகளே போதும்…!

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! பரு வந்த இடத்துல கருப்பா தழும்பு மட்டும் போகவே மாட்டேங்குதா?

nathan

நம்முடைய வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே இமீடியட் சிகப்பழகு பெற முடியும்.

nathan

மூக்கின் மேல் வெண் புள்ளிகளா? தீர்க்க இத செய்யுங்க

nathan