1480576587 7994
சூப் வகைகள்

முருங்கை கீரை சூப் செய்ய…

தேவையான பொருட்கள்:

முருங்கை இலை – 2 கப்
கேரட் துருவல் – அரைகப்
தேங்காய் துருவல் – அரைகப்
பெரிய வெங்காயம் – 2
இஞ்சி துண்டுகள் – 3
பூண்டு – 1
மல்லி இலை – ஒரு பிடி
உப்பு – தேவையான அளவு
மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – சிறிதளவு

1480576587 7994
செய்முறை:

முருங்கை இலையை நார் இல்லாத அளவுக்கு சுத்தமாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பெரிய வெங்காயத்தையும், இஞ்சியையும் சிறிதாக நறுக்கவும். மல்லி இலையையும் நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

நெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணையையும் பயன்படுத்தலாம். கேரட் துருவல், தேங்காய் துருவல், பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி இலை போன்றவைகளை ஒன்றாக்கி அதில் ஐந்து கப் தண்ணீர் விட்டு கொதிக்கவையுங்கள். வெந்து வரும்போது தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

வாணலியை சூடாக்கி நெய் அல்லது தேங்காய் எண்ணையை ஊற்றி சூடாக்குங்கள். சூடானதும் சீரகம், முருங்கை இலையைக் கொட்டி லேசாக வதக்குங்கள். அதையும், வேகவைத்த பொருட்களையும் ஒன்றாக்கி மிக்சியில் போட்டு ஓடவிடுங்கள். அதில் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் சூப்பையும் சேர்த்து மீண்டும் கொதிக்கவிடுங்கள். அத்துடன் மிளகுதூள், காயத்தூள், உப்பு போன்றவைகளைச் சேர்த்து இறக்கவும். சத்துக்கள் மிகுந்த முருங்கை கீரை சூப் தயார்.

Related posts

சத்து நிறைந்த ராகி நூடுல்ஸ் வெஜிடபிள் சூப்

nathan

ப்ரோக்கலி சூப்

nathan

பசலைக்கீரை பருப்பு சூப்

nathan

சத்தான சுவையான பச்சை பயறு சூப்

nathan

சத்தான ஓட்ஸ் – ப்ரோக்கோலி சூப்

nathan

முருங்கை பூ சூப்

nathan

சத்து நிறைந்த கொள்ளு வெஜிடபிள் சூப்

nathan

ஜிஞ்சர் சூப்

nathan

பாலக் கீரை சூப்

nathan