குழந்தை பெற்றெடுக்க இயலாத மனையின் கருமுட்டை – கணவரின் உயிரணு ஆகிய இரண்டையும் தன்னுடைய கருப்பையில் வளர்த்தெடுத்து பிள்ளை பெற்று தரும் பெண்மணியே வாடடைத்தாய்.
வாடகைத்தாய் முறையில் உள்ள நன்மைகளும், தீமைகளும்
குழந்தை பெற்றெடுக்க இயலாத மனையின் கருமுட்டை – கணவரின் உயிரணு ஆகிய இரண்டையும் தன்னுடைய கருப்பையில் வளர்த்தெடுத்து பிள்ளை பெற்று தரும் பெண்மணியே வாடடைத்தாய். ஆனாலும் இது அத்தனை சுலபமானது அல்ல.
கர்ப்பமானால் பேறுகாலம் – பிரசவ வலியைம எதிர்கொள்ள பயப்படுவோர், குழந்தை பெற விருப்பமற்ற மனைவி மற்றும் அடிக்கடி பயணம் மேற்கொள்வோருக்கும் செயற்னை கருத்தரிப்பு மையங்களில் வாடகைத்தாய் வாயிலாக பிள்ளை பாக்கியம் தரப்படுகிறது. பிரசவத்தின் போது தாயின் உயிருக்கு உடல்நலத்துக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. காப்பீடு திட்டங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
வாடகைத்தாயின் வயிற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட கருமுட்டை வைக்கப்பட்டு இதில் தேவையற்ற கருமுட்டைகள் அழிக்கப்படுகின்றன. இத்தகைய விஷயங்கள் வாடகைத்தாய்க்கு தெரியாமல் நடக்கிறது. பொதுவாக ஒரு கருவை சுமந்து குழந்தையை பெற்றெடுத்த பெண், குறிப்பிட்ட காலம் வரை வாடகைத்தாயாக இருக்க முடியாது.
ஆனால் இங்கே ஒரு பெண் பிரசவமான ஒன்றிரண்டு மாதங்களிலேயே மீண்டும் வாடகைத்தாயாக வந்து விடுகிறான். வாடகைத்தாய் முறைக்கு ஒரு சிலர் தவிர பலரும் சம்மதிப்பது இல்லை. இதனால் டாக்டர்கள் வேறு வழியின்றி வந்தவர்களையே மறுபடியும் நாட வேண்டிய நிலையை நிலவுகிறது. இதற்கிடையே வாடகைத்தாய் முறையில் சொந்த பெற்றோர் தரப்பை மட்டுமே குற்றம் சுமத்த இயலாது.
வாடகைத்தாய்களில் சிலரும் ஆங்காங்கே தவறு செய்கிறார்கள். கர்ப்பமான பிறகு பேசியதற்கு மேலாக எனக்கு பணம் தரவேண்டும் இல்லையெனில் கருவை கலைத்து விடுவேன் என்று மிரட்டுவது, ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு உட்பட மறுப்பது, மருந்து – மாத்திரைகளை புறக்கணிப்பது உள்ளிட்ட செயல்களில் வாடகைத்தாய்மார்கள் ஈடுபடுவதாகவும் பேச்சு அடிபடுகிறது.
வாடகைத்தாயாக விரும்புவோர் தன்னார்வ நிறுவனங்களின் வாயிலாக நிறுவனங்களின் வாயிலாக ஆஸ்பத்திரிகளை அணுகலாம். அங்கு சட்ட ஆலோசகர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. எனவே, இரண்டு தரப்புக்கும் இடையே பிரச்சனை எழ வாய்ப்பு குறைவு. முக்கியமாக வாடகைத்தாய்க்கு பேசியபடி பணம் கிடைக்கும்.
கர்ப்பம் இடையில் கலையும் பட்சத்தில் இழப்பீடாக 30 ஆயிரம் வரை வழங்கவும் ஓப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. வாடகைத்தாய் முறை என்பது பொருளாதார வசதி உரியோருக்கு மட்டுமே உகந்ததாக இருக்கிறது. எனவே மத்திய – மாநில அரசுகள் முன்வந்து மானியம், கடனுதவி வழங்க வேண்டும். இந்தியாவில் குழந்தையின்மை பிரச்சனை அதிகமாக உள்ளது.
இதற்கு நல்ல தீர்வு. வாடகைத்தாய் முறைதான். வாடகைத்தாய் முறை என்பது கருப்பை இல்லாத பெண்ணுக்கு ஒரு தாயின் நிலையில் இருந்து பெற்று தருகிற உன்னதமான விஷயம்.