27 C
Chennai
Wednesday, Nov 20, 2024
13
சிற்றுண்டி வகைகள்

பீர்க்கங்காய் தோல் துவையல்!


பீர்க்கங்காய் தோல் துவையல்

13



தேவையானவை:
பீர்க்கங்காய் தோல் – 1 கப் , பீர்க்கங்காய் பிஞ்சு – 5 துண்டு, பச்சைமிளகாய் – 3, பூண்டு – 2 பல், தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், புளி – நெல்லி அளவு, கடுகு – 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:கடாயில் துளி எண்ணெய்விட்டு, பீர்க்கங்காய் தோல், பீர்க்கங்காய் துண்டுகள், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கிக்கொள்ளவும். இறுதியாக புளி சேர்த்து வதக்கிய பின், மிக்ஸியில் தேங்காய்த் துருவல், வதக்கியவற்றை போட்டு, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்துச் சேர்க்கவும்.

பலன்கள்:
குறைவான கலோரிகள் கொண்டது. சர்க்கரை நோயாளிகள் சப்பாத்தியுடன் சாப்பிடலாம். இரும்புச்சத்து, வைட்டமின், நார்ச்சத்து நிறைவாக உள்ளன. டயட்டில் இருப்பவர்கள் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

Related posts

வாழைக்காய் பஜ்ஜி

nathan

இறால் வடை

nathan

பிரட் பஜ்ஜி

nathan

நெய் ரோஸ்ட் | Ghee Roast

nathan

ஹாட் அண்ட் சோர் ராகி கேக்ஸ்

nathan

சுவையான மொறுமொறு கோலா உருண்டை

nathan

உருளைக்கிழங்கு சமோசா

nathan

வெள்ளரி அல்வா

nathan

செம்பருத்தி பூ தோசை

nathan