25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
அழகு குறிப்புகள்

அழகு குறிப்புகள், பளிச்சென்று இருக்க..,BEAUTY TIPS IN TAMIL

 

அக்னி வெயில் சுட்டெரிக்கையில் உடலை பேணி பாதுகாப்பது என்பது சற்று சவாலான காரியம்தான். சரியான வழிமுறைகளைக் கைக்கொண்டால் கோடையிலும் குளுமையை உணரலாம். கோடையில் கடைபிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகள்…….

* கோடை நாட்களில் கூட குளிக்கும் தண்­ணீரில் பாடி டெம்பரேச்சரில் இருப்பது நன்று. தண்ணீ­ரில் பாத் சால்ட், புதினா, வெள்ளரி வில்லைகள், எலுமிச்சை ரசம்…. என போட்டுக் குளித்தீர்களானால் நறுமணமும் புத்துணர்ச்சியும் கிட்டும்.

* உங்கள் ஹேண்ட்பாகில் டிஷ்யூ பேப்பர் எப்போதுமே வைத்திருங்கள். வியர்வை வழிந்தால் அழகாக பேப்பரால் ஒற்றி எடுக்கவும். தூசி, அழுக்கு, வியர்வை… என சகலமும் வைப் அவுட் ஆகிவிடும்.

* வெயிலில் டூவீலரில் போகும் பெண்கள் தலையில் ஸ்கார்ஃப் அணிவது வெயிலிலிருந்தும் காப்பாற்றும்.

* வெளியில் போவதற்கு முன்னால் முகத்தில் சன்ஸ்க்ரீன் ஞாபகமாகத் தடவவும். மாய்சரைஸர் தடவிய பிறகே சன்ஸ்க்ரீன் போடவும்.

* காட்டன் உடைகளையே அணியவும். சின்தடிக் ஆடைகள் கோடையைக் கடுமையாக்கும்.

* வாட்டர் சும்மா பாட்டில் பாட்டிலா குடிக்கவும்.

* காபி, டீ, மசாலா, எண்ணெய் உணவு வகைகளுக்கு டூ விடவும். பழங்கள், சாலட் வகைகள், சர்பத், நீர்மோர், லஸ்ஸிக்கு சேத்தி சொல்லவும். காலையில் முதலில் ஆரஞ்சு ஜூஸ் குடிக்கவும்.

* உங்கள் வார்ட் ரோபில் கண்டிப்பாக இடம் பிடிக்க வேண்டியல் பட்டியல் இதோ: ஏ-லைன் ஸ்கர்ட், கேப்ரீ பான்ட், காதி காட்டன் குர்தீஸ், வொயிட் டாப்ஸ்.

* வியர்வை வழிந்துகொட்டும் என்பதால் மேக்கப்பில் கவனம் தேவை. லிக்விட் ஐ-லைனருக்குப் பதில் வாட்டர் ப்ரூஃப் மஸ்காரா அல்லது ஐபென்சில் உபயோகிக்கவும்.

* வெயிலினால் கருமை படிந்தால் தயிரில் வெள்ளரி ஜூஸ், மஞ்சள் பொடி கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவினால் முகம் பளிச்சென்று ஷைனாகும்.

* கைகள் கறுப்பாகிவிட்டதே என ஓலமிடாமல் சன்ஃபிளவர் ஆயில் கொஞ்சம் எலுமிச்சை ஜூஸ், கொஞ்சம் சர்க்கரை சேர்த்துத் தடவி சிறிது நேரம் கழித்து வாஷ் பண்ணினால் கைகள் பளபளக்கும்.

 

Related posts

பரு

nathan

ஆண்ட்டியான சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் ஆடிய விஜே பிரியங்கா!!

nathan

முகப்பருக்களை போக்கும் வேப்பிலை

nathan

பாத வெடிப்பை போக்கும் இயற்கை வைத்தியம்

nathan

நம்ப முடியலையே… 15 கிலோ எடை குறைத்த சிம்பு! புதிய புகைப்படம்…

nathan

இரும்புச்சத்து நிறைந்த உலர் ஆப்ரிகாட்கள் இரத்த சோகைக்கு எதிராக போராடுவதற்கு உதவக்கூடியவையாகும். மேலும் இரும்புச்சத்தை உறிஞ்சக்கூடியதான செம்பும் இதில் நிறைந்துள்ளது.

nathan

இந்த வயதிலும் எப்படி…. என கேட்கும் பெண்களுக்காக ஜொலிக்கும் நயன்தாரா!… யூட்டி டிப்ஸ்கள் இதோ..

nathan

தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு இதுதான் நடந்ததாம்? பயில்வான்..

nathan

காயம் ஏற்பட்டால் நாம் முதலில் தடவுவது தேங்காய் எண்ணெய்யை தான். தேங்காய் எண்ணெய் காயங்களை ஆற்றுவதோடு மட்டுமல்லாமல், அந்த காயங்களில் நீர் புகாமல் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துகிறது.

nathan