அதிக சூட்டினால் அல்லது வியர்வையினால் பருக்கள் போன்ரு தலையில் எழுவதுண்டு. முகப்பருகக்ள் போல் தலையிலும் உண்டாகும். இது கிருமிகளினாலும், அதிக வெப்பத்தினாலும் உண்டாகக்கூடியது.
இந்த பருக்களை போக்கும் ஒரு எளிய வைத்தியம் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. பாருங்கள்.
வேப்பிலை நீர் :
வேப்பிலை கைப்பிடி எடுத்து நீரில் கொதிக்க விடுங்கள். பின்னர் ஆறியதும் வடிகட்டி அந்த நீரினால் அலசினால் அந்த பருக்கள் மாயமாகிவிடும். வாரம் 3 நாட்கள் செய்தால் போதும். விரைவில் பலன் தெரியும்.
வெந்தய இலை :
வெந்தய இலை குளிர்ச்சி தரும். சூட்டினாலும் வரும் கொப்புளங்களை ஆற்றும். வெந்தய இலையை நீர் சேர்த்து அரைத்து அதனை தலையில் தேய்க்கவும். காய்ந்த்தும் தலைமுடியை அலசுங்கள். வாரம் இருமுறை செய்யுங்கள்.
ஆலிவ் எண்ணெய் மற்றும் தேயிலை மர எண்ணெய் :
ஆலிவ் எண்ணெய் கூந்தலுக்கு தேவையான அளவு எடுத்து அதனுடன் சில துளி தேயிலை மர எண்ணெயை கலந்து தலையில் தேய்க்கவும். மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசவும்.
பட்டை மற்றும் தேன் :
கால் கல் பாலில் தேன் 1 ஸ்பூன் மற்றும் அரை ஸ்பூன் பட்டைப் பொடியை கலந்து முகத்தில் தேய்க்கவும். 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசுங்கள்.
எலுமிச்சை மற்றும் நீர் :
எலுமிச்சை சாறை எடுத்து அதில் நீர் சேர்த்து தலையில் த்டவுங்கள். 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலச வேட்ணும். வாரம் ஒருமுறை செய்தால் போதும்