29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
25E025AE259525E025AE25AE25E025AF258D25E025AE25AA25E025AF25812B25E025AE258725E025AE259F25E025AF258D25E025AE25B225E025AE25BF
சிற்றுண்டி வகைகள்

கம்பு இட்லி

(1) கம்பு இட்லி

தேவையான பொருட்கள் :

1 cupஇட்லி அரிசி 1 cupகம்பு 1/2 cupஉளுத்தம் பருப்பு 1 Tspவெந்தயம் 2 Tspஉப்பு [ Adjust ]

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் அரிசியையும் கம்பையும் எடுத்துக்கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயம் எடுத்துக்கொள்ளவும். நன்கு இரண்டு மூன்று முறை கழுவிய பின்னர் தனித்தனியாக மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். மூன்று மணி நேரத்திற்குப் பிறகு மாவரைக்கும் இயந்திரத்தை சுத்தமாக தண்ணீர் விட்டு கழுவவும். முதலில் உளுந்தை அவ்வப்போது தண்ணீர் சிறுக சிறுகத் தெளித்து நன்கு உப்பி வரும்வரை அரைத்து எடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றி விடவும். உளுந்து மாவு சிறிதளவு எடுத்து தண்ணீரில் போட்டால் மேலே மிதக்கும். மேலும் மாவின் நிறமும் வெளுத்து வரும். அதுதான் சரியான பதம். பின்னர் அரிசி கம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த அரிசி சோள மாவை எடுத்து பாத்திரத்திற்கு மாற்றும் முன்னர் உப்பு சேர்த்து ஓரிரண்டு சுற்றுக்கள் சுற்ற விடவும். மாவரைக்கும் இயந்திரத்தை அணைத்து விட்டு உளுந்து மாவு எடுத்து வைத்துள்ள பாத்திரத்தில் எடுக்கவும். மாவரைக்கும் இயந்திரத்தில் ஒரு Tbsp அளவு தண்ணீர் விட்டு ஒட்டியிருக்கும் மாவை கழுவி அரைத்து வைத்துள்ள மாவில் சேர்க்கவும். கையினால் நன்கு கலந்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும். அதாவது முதல் நாள் மாலை மாவை அரைத்து வைத்தால் மறு நாள் இட்லி தயாரிக்கலாம்.

இட்லி பானையில் 3 கப் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.
இட்லி தட்டின் குழிகளில் ஒரு சொட்டு நல்லெண்ணெய் விடவும்.
எல்லா இடங்களிலும் பரவும் படி தடவவும்.
மாவை ஒரு குழி கரண்டி கொண்டு நன்கு கலக்கி விடவும்.
இப்போது குழிகளில் மாவை நிரப்பவும்.
இட்லி பானையில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் இட்லி தட்டை உள்ளே வைத்து மூடவும்.
ஆவியில் எட்டு நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

குழிகளிலிருந்து இட்லி ஒட்டிக்கொள்ளாமல் எடுக்க ஒவ்வொரு இட்லியின் ஓரத்தை சுற்றி நீர் விட்டு பிறகு தேக்கரண்டியால் எடுக்கவும். தேக்கரண்டியை அடிக்கடி தண்ணீரால் ஈரப்படுத்திக்கொள்ளவும்.
———————————————————————————————————————-

%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581%2B%25E0%25AE%2587%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AE%25BF

——————————————————————————————————————–
(2) கம்பு இட்லி

தேவையானவை: கம்பு, இட்லி அரிசி – தலா 200 கிராம், உளுத்தம்பருப்பு – 75 கிராம், பொடியாக நறுக்கிய கேரட், கொத்தமல்லித் தழை, குடமிளகாய் – தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:கம்புடன் இட்லி அரிசியைக் கலந்து ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அதேபோல், உளுத்தம்பருப்பையும் தனியாக ஊறவைக்க வேண்டும். முதலில் உளுந்தை வெண்ணெய் போல (கிரைண்டரில்) நன்றாக அரைக்க வேண்டும். ஊறவைத்த கம்பு, அரிசியையும் அரைத்து உளுந்து மாவுடன் சேர்த்து, உப்பு கலந்து கரைத்து வைத்துக்கொள்ளவும். மறுநாள் காலையில், இட்லிப்பாத்திரத்தில் துணியை வைத்து நறுக்கிய கேரட், கொத்தமல்லித்தழை, குடமிளகாய் ஆகியவற்றை வைத்து, அதன்மேல் இட்லி மாவை ஊற்றி வேகவைத்தால் கம்பு இட்லி தயார். கம்பு இட்லி மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும். இது ஆரோக்கியத்துக்கு உகந்தது.

Related posts

குழந்தைகளுக்கு சத்தான கேழ்வரகு – கம்பு ஃப்ரூட்ஸ் மில்க்

nathan

பிரண்டை சப்பாத்தி

nathan

முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்

nathan

கேரட் புதினா புலாவ் செய்ய வேண்டுமா…..?

nathan

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் எள் நூடுல்ஸ் எப்படி ஆரோக்கியமாக தயாரிக்கலாம் என தெரியுமா உங்களுக்கு?

nathan

சாக்லேட் கேக் செய்வது எப்படி ?

nathan

அவகாடோ சாண்ட்விச்

nathan

பனீர் கோஃப்தா

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கஸ்தா நம்கின்

nathan