25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201704250931161307 lifesaving Helmet refusal to wear SECVPF
மருத்துவ குறிப்பு

பெண்கள் ‘ஹெல்மெட்’ என்கிற உயிர் காக்கும் கவசத்தை அணிய மறுப்பது ஏன்?

ஹெல்மெட் அணிந்திருந்தால் விபத்து ஏற்படும் போது பெரிய அளவிலான சேதத்திலிருந்து தப்பிக்கலாம் என்பதாலேயே, அது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

பெண்கள் ‘ஹெல்மெட்’ என்கிற உயிர் காக்கும் கவசத்தை அணிய மறுப்பது ஏன்?
இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஆபத்பாந்தவனாக விளங்குவது ‘ஹெல்மெட்’ எனப்படும் தலைக்கவசம். அது தலையை காக்கும் கவசம் மட்டும் அல்ல உயிர்க்கவசமும் கூட.

இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள்தான் அதிகளவில் விபத்தில் சிக்குகின்றனர். இரு சக்கர வாகன விபத்துகளின் போது பெரும்பாலும் தலையில்தான் அடிபடுகிறது. இதனால் ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகள்தான் பெரும்பாலான சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர்.

முகம் மற்றும் தண்டுவடம் பகுதி, தலை, கழுத்து பகுதி, மூளை ஆகியவற்றில் அடிபடும் போது பெரும்பாலான வாகன ஓட்டிகள் உயிரிழக்கின்றனர் அல்லது பலத்த காயங்களுடன் நடைபிணமாகின்றனர்.

ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என சட்டம் மற்றும் தீர்ப்புகள் இருந்தும், சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் செல்பவர்களை பார்க்க முடிகிறது.

பலர் ஹெல்மெட் வாங்கி வைத்துக்கொண்டு அதை தலையில் அணியாமல் இருசக்கர வாகனத்தின் கண்ணாடியிலேயோ, பெட்ரோல் டாங்க்கின் மேலேயோ அல்லது வாகனத்தின் பின்புறத்திலோ வைத்துக்கொண்டு செல்கின்றனர்.

விலை உயர்ந்த தரமான ஹெல்மெட்டை வாங்கி தலையில் அணிந்து கொண்டு, அதை லாக் செய்யாமல் பயணிக்கும் போது சிறு விபத்து நிகழ்ந்தாலும், தலையில் இருந்து ஹெல்மெட் கழன்று விழுந்து தலையில் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

201704250931161307 lifesaving Helmet refusal to wear SECVPF

செய்வதை திருந்த செய்வோம், அதன் முழு பலனை அனுபவிப்போம். ஹெல்மெட் அணிவது உங்களது பாதுகாப்பிற்காகவும், உங்களையே நம்பி இருக்கும் உங்கள் குடும்பத்தினருக்காகவுமே தவிர போலீசாரின் சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக மட்டுமே என்று நினைத்து அணிய வேண்டாம்.

ஹெல்மெட் வாங்கும்போது பின்வரும் சில முக்கிய விஷயங்களை நினைவில் கொள்வது நல்லது. ஹெல்மெட் ரூ.200 முதல் கிடைக்கிறது. ஆனால் இதுபோன்ற ஹெல்மெட்களால் பயன் இல்லை.

மனித உயிர் விலை மதிப்பற்றது. இந்த உயிர் காக்கும் விஷயத்தில் பணம் மிச்சம் என நினைத்து தரம் குறைந்த ஹெல்மெட்டை வாங்க வேண்டாம். ஐ.எஸ்.ஐ முத்திரை கொண்ட தரமான ஹெல்மெட்டையே வாங்கவும்.

குறைந்த விலையில் கிடைக்கும் தரம் குறைந்த ஹெல்மெட் போலீசாரிடமிருந்து தப்பிக்க மட்டுமே உதவுமே தவிர உயிர் காக்க பயன்படாது. ஹெல்மெட் மூன்று வகையான மாடல்களில் உள்ளன. தலை மற்றும் முகம் முழுவதையும் மூடும் வகையில் உள்ள ஹெல்மெட் , தலையை மட்டும் மூடும் வகையில் உள்ள ஹெல்மெட், பாதிதலையை மட்டும் மூடும் ஹெல்மெட்.

ஹெல்மெட் தேர்வு செய்யும் போது நமது தலைக்கு சரியாக பொருந்துவதை பார்த்து தேர்வு செய்ய வேண்டும். ஹெல்மெட்டில் உள்ள கண்ணாடி துல்லியமான பார்வை கொண்டதாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஹெல்மெட் வாங்கும்போது தாடையோடு சேர்த்து லாக் செய்யும் தன்மை கொண்ட ஹெல்மெட்டே வாங்க வேண்டும். தலை மற்றும் முகத்தை முழுவதுமாக மறைக்காத ஹெல்மெட்டை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தலை மற்றும் தாடையை முழுவதுமாக மறைக்கும் ஹெல்மெட்டை பயன்படுத்துவது நல்லது.

ஹெல்மெட் அணியும் போது அது மிகவும் இறுக்கமாக இருந்தால் தலைவலி, கழுத்துவலி ஏற்படும். ஹெல்மெட் உங்கள் தலைக்கு மிகவும் சரியாக பொருந்தும்படி பார்த்து தேர்வு செய்ய வேண்டும். அது மிகவும் இறுக்கமாகவோ அல்லது பெரிதாகவோ இருக்கக்கூடாது.

முதலில் ஹெல்மெட் அணியும் போது சிலருக்கு தலைவலி ஏற்படுவது உண்டு. அவ்வாறு தொடர்ந்து தலைவலி ஏற்பட்டால் அது உங்களுக்கு பொருத்தமில்லாத ஹெல்மெட் என்று தெரிந்து கொள்ளலாம்.

நல்ல மிளிரும் வண்ணம் கொண்ட ஹெல்மெட்டை தேர்வு செய்வது நல்லது. இது இருட்டில் செல்லும் போது மற்றவர்களால் நம்மை எளிதாக அடையாளம் காண முடியும்.

எனவே பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் சிறிது தூரம் பயணம் சென்றாலும் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்யுங்கள். ஏனென்றால் விபத்து என்பதே எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத இடத்தில் நடப்பதுதான்.

வீட்டில் இரு சக்கர வாகனத்தை எடுக்கும் போதே ஹெல்மெட் அணியும் பழக்கம் இயல்பாகவே வர வேண்டும். வண்டியில் குழந்தைகளை உடன் அழைத்துச் செல்லும் போது அவர்களுக்கும் ஹெல்மெட் அணிந்து கூட்டிச் செல்லுங்கள்.

வெளியே சென்றவருக்கு விபத்து ஏற்பட்டால் மனைவி கணவனை இழக்கலாம், ஒரு தாய் தன் மகனை இழக்கலாம், குழந்தைகள் தந்தையை இழக்கலாம். நம் இழப்பு நம்மோடு முடிந்து விடுவது இல்லை. நம்மை சார்ந்துள்ளவர்களை நம் இழப்பு எவ்வாறு பாதிக்கும் என்று ஒரு நிமிடம் யோசித்தால் போதும், உயிர்காக்கும் தோழனான ஹெல்மெட்டை நிச்சயம் மறக்கமாட்டீர்கள்.

ஹெல்மெட் அணிந்திருந்தால் விபத்து ஏற்படும் போது பெரிய அளவிலான சேதத்திலிருந்து தப்பிக்கலாம் என்பதாலேயே, அது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விஷயத்தில் தங்கள் உயிரை காக்க மக்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும்.

அணிய மறுப்பது ஏன்?

ஹெல்மெட் அணியாமல் இருப்பதற்காக சிலர் கூறும் காரணங்கள்

1. கழுத்து வலிக்கும் 2. முடிகொட்டும் 3. தலைவலி வரும் 4. அதிகமாக வியர்க்கும் 5. காது கேட்காது 6. இருபுறமும் வரும் வாகனம் தெரியாது.

ஆனால் இந்த காரணங்களை சரி செய்யவும் வழி இருக்கிறது.

* ஹெல்மெட் அணிவதால் மட்டுமே கழுத்துவலி வராது. தலைக்கு சரியாக பொருந்தாத ஹெல்மெட் அணியும்போது தான், தலை பாரமாக இருப்பது போன்று தோன்றும். சரியான ஹெல்மெட் அணிந்து அதனை தாடையோடு மாட்டியவுடன் சேர்த்து லாக் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் கழுத்து வலி வராது.

* தலையை சுத்தமாக வைத்து பராமரித்தாலே தலைமுடி உதிராது. ஹெல்மெட் அணிந்து கொண்டு நீண்ட தூரம் பயணிக்கும் போது அவ்வப்போது கழற்றி விட்டு காற்றோட்டமாக இருக்க வேண்டும். தலை மற்றும் கழுத்து பகுதியில் வியர்வை பட்டு ஹெல்மெட்டின் பின்பகுதி அழுக்காகும். அதை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். ஹெல்மெட்டின் உட்பகுதியை வெயிலில் காய வைத்தால் வியர்வை வாசனை வராது.

* ஹெல்மெட் அணியும் போது அது மிகவும் இறுக்கமாக இருந்தால்தான் தலைவலி ஏற்படும். அவ்வாறு இறுக்கமாக இல்லாமல் சரியாக பொருந்தக்கூடியதாக பார்த்து தேர்வு செய்ய வேண்டும்.

* ஹெல்மெட் அணிந்து செல்லும்போது தலையில் வியர்வை வந்தால் சுத்தமான கைக்குட்டையை தலையை சுற்றி கட்டி அதன் மேல் ஹெல்மெட் அணியலாம். ஹெல்மெட் உள்ளே அணிவதற்காகவே ஹெல்மெட் தொப்பி என கடைகளில் கிடைக்கிறது. இது வியர்வையை உறிஞ்சி விடும்.

* தற்போது ஹெல்மெட்டில் காற்று வருவதற்கு ஏற்ப வென்டிலேட்டர் வசதி உள்ளது. இந்த வடிவமைப்பில் காது கேட்பதற்கும் காற்று வருவதற்குமான வசதிகள் உள்ளன.

* ஹெல்மெட் அணிந்தால் இருபக்கமும் பார்க்க முடியாது என்பதை ஏற்க முடியாது. நமது இரு சக்கர வாகனத்தின் இருபுறமும் இருக்கும் கண்ணாடியின் மூலமாக பக்கவாட்டில் வரும் வாகனங்களை பார்க்கலாம்.

* எல்லாவற்றுக்கும் மேலாக, மிதமான வேகத்தில் செல்லுங்கள். விபத்து ஏற்பட்டாலும் தலைக்கு வந்தது ஹெல்மெட்டோடு போய்விடும்.

Related posts

ஒருவரது உடம்பில் எவ்வளவு கொழுப்பு இருக்கலாம்?

nathan

பெருங்காயம்… கடவுளின் அமிர்தம்!

nathan

பற்களுக்கு அடியில் வெங்காயத்தை வைப்பதால் உடல் பெறும் நன்மைகள் தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…தூங்கும் போது தலையணைக்கு கீழ் ஒரு பல் பூண்டு வைப்பதால் பெறும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

nathan

உங்களுக்கு சாக்போர்ட்டை நகங்களால் கீறும் போது உடலில் கூச்ச உணர்வு உண்டாவது ஏன்?

nathan

நீங்களும் முயற்சி செய்யுங்கள் ! செரிமான பிரச்சனைகளைத் தடுக்க ஆயுர்வேதம் சொல்லும் சிறப்பான வழி!!!

nathan

ஒரு குழந்தைக்கு நீரிழிவு நோய் உள்ளதா என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?

nathan

தெரிந்துகொள்வோமா? குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுப்பது எப்படி?

nathan

உங்க குடல்கள் ஆரோக்கியமாக செயல்பட தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்! சூப்பரா பலன் தரும்!!

nathan