என்னென்ன தேவை?
முற்றிய வாழைக்காய் – 2.
வறுத்து அரைக்க:
துவரம் பருப்பு – 1/2 கப்,
பெருங்காயம் – 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 6.
தாளிக்க:
எண்ணெய் – 1/4 கப்,
கடுகு – 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 பிடி,
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
வறுக்க கொடுத்த பொருட்களை எண்ணெயில் சிவக்க வறுத்து அரைக்கவும். வாழைக்காயை இரண்டாக வெட்டி, இட்லிப்பானையில் வேகவிடவும் அல்லது தண்ணீரில் கொதிக்க விடவும். தோலை உரித்து துருவி வைக்கவும். மிகவும் குழைய விடக்கூடாது. குழைந்தால் துருவ முடியாது. கடாயில் எண்ணெயை காய வைத்து, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, துருவிய வாழைக்காய், உப்பு, அரைத்த மசாலா தூள்களைச் சேர்த்து கலந்து கிளறி சாம்பார், ரசம், சாதத்துடன் பரிமாறவும்.