31.8 C
Chennai
Wednesday, Jul 16, 2025
hair 10 1481359568
தலைமுடி சிகிச்சை

முடி 2 இன்ச் நீளமாக வளரச் செய்யும் சில்வர் ஃபாயில் மாஸ்க்!! ட்ரை பண்ணியிருக்கீங்களா?

கூந்தல் வளர மாஸ்க் போடுவதால் உண்டாகும் பலன் என்னவென்றால் கூந்தலுக்கு போஷாக்கு அளிப்பதோடு, கூந்தல் வளரவும் தூண்டும்.

முடி உதிர்தலை கட்டுப்படுத்தி, கூந்தலின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும். ஆகவே வாரம் ஒருமுறை கடாயம் ஏதாவது ஒரு கூந்தல் மாஸ்க் போடுவதால் நன்றாக கூந்தல் செழித்து வளரும்.

உங்கள் கூந்தலுக்கு ஊட்டம் தந்து நன்றாக வளரச் செய்யும் ஒரு ரெசிபி தான் இங்கே சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து படியுங்கள்.

ஸ்டெப் -1 முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொள்ளுங்கள். மஞ்சள் கரு வேண்டாம்.

ஸ்டெப்- 2 வாழைப் பழத்தை நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். கட்டி கட்டியாக இல்லாமல் பாத்துக்கொள்ளுங்கள். அதன் பின் அதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து கலக்குங்கள்.

ஸ்டெப்- 3 இந்த கல்வையில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு சாறை கலக்கவும். உங்கள் கூந்தலுக்கு தகுந்தாற்போல் இன்னும் வேண்டுமென்றால் ஆரஞ்சு சாறை கலந்து கொள்ளுங்கள். நன்ராக பேஸ்ட் போல் ஆக்கிக் கொள்ளுங்கள்.

ஸ்டெப்- 4 இவற்றில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் பால் சேர்த்து எல்லாவற்றையும் கலந்து கொள்ளுங்கள். உங்களுக்கு அதிகபப்டியான வறட்சி கூந்தலில் இருந்தால், இன்னும் சிறிது வாழைப் பழத்தை சேர்க்கலாம்.

ஸ்டெப்- 5 உங்கள் கூந்தலை நன்றாக சிக்கில்லாமல் சீவிக்கொள்ளுங்கள். முக்கியமாக அழுந்த சீவினால் அதிக ரத்த ஓட்டம் பாயும். பின்னர் இந்த மாஸ்க் உபயோகிக்கலாம்.

ஸ்டெப்-6 பகுதி பகுதியாக பிரித்து அதன் பின் தலை முடிகளில் தடவுங்கள். இதனால் எல்லா இடங்களிலும் முக்கியமாக ஸ்கால்ப்பில் நன்றாக பதியும்.

ஸ்டெப்-7 ; அதன் பின் சில்வர் ஃபாயில் கவரால் உங்கள் கூந்தலை மூடுங்கள். இதனால் இந்த மாஸ்க் கலவை கசியாமல் இருக்கும்.

ஸ்டெப்- 8 : ஒரு மணி நேரம் கழித்து தலை முடியை அலசவும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்தால் நீளமாக முடி வளரும். நீங்கள் முயற்ஸித்துப் பாருங்கள்.

hair 10 1481359568

Related posts

உறுதியான தலைமுடிக்கு… 5 வழிகள்

nathan

உங்க முடி பறவைக்கூடு மாதிரி அசிங்கமா இருக்கா?

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சியைப் பயன்படுத்துவது எப்படி?

nathan

நீங்கள் Hair style செய்து கொள்வதற்கு முன் இதைப் படியுங்கள்..

nathan

உங்களுக்கு தெரியுமா பொடுகுத் தொல்லையை நீக்கும் வெங்காயச் சாறு!

nathan

நீங்கள் எந்த வயதிலும் கூந்தல் அழகியாக ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்..

nathan

வழுக்கை விழுவதைத் தடுக்க வழிகள்

nathan

இந்த எண்ணெயை தினமும் யூஸ் பண்ணுங்க.. தலைமுடி எலி வால் போன்றாவதைத் தடுக்கணுமா?

nathan

முடி உதிர்வு எளிய வீட்டு சிகிச்சை

nathan