23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
news 31 08 2014 98kl
உடல் பயிற்சி

தினசரி உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்

உடற்பயிற்சி செய்வதன் மூலம் நமது உடல் மட்டுமல்லாது மனமும் வலிமை அடைகிறது. உடலும் மனமும் ஒருமுகமாவதற்கு உடற்பயிற்சி உதவுகிறது. நல்ல உடல் ஆரோக்கியம் பெற தினசரி உடற்பயிற்சி செய்வது நல்லது. உடற்பயிற்சி செய்வதன் மூலமாக கட்டுக்கோப்பான உடல் அமைப்பு பெறலாம்.
அதனால் தினசரி சிறிது நேரமாவது உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம் ஆகும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் சோர்வு குறைவதினால் நாம் தினசரி செய்யும் வேளைகளில் அதிகளவில் ஈடுபட முடியும். அதனால் நமது உற்பத்தித்திறன் அதிகரிக்கிறது. தினசரி உடற்பயிற்சி செய்வதால் உடலும் மனமும் வலுப்பெறுவதினால் நமது வாழ்நாள் தானாகவே அதிகரிக்கிறது.
அதனால் கட்டாயம் தவறாது உடற்பயிற்சி செய்யுங்கள். வழக்கமாக உடற்பயிற்சிகளை நாம் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் தேவையற்ற கொழுப்பு கரைந்து நமது தசைகள் வலுப்பெறுகின்றன. வழக்கமாக உடற்பயிற்சி செய்வதன் மூலம் நமது உடல் ஆரோக்கியம் அடைவது மட்டுமில்லாது, சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைத்து புத்துணர்ச்சி அளிக்கிறது.
அதனால் தவறாது தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். பல்வேறு காரணங்களால் அலுவலகத்திலும், வீட்டிலும் நமக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு. இதை தவிர்க்க உடற்பயிற்சி செய்வது ஓர் நல்ல வழியாகும். உடற்பயிற்சி மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கிறது.
தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்புகளை சீரமைக்கிறது மற்றும் இரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்துக்களையும் சரி செய்கிறது. தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதயம் வலிமை அடைவதால், அவர்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் மிக குறைவாகவே ஏற்படுகிறது. எனவே, இதயம் சார்ந்த நோய்களில் இருந்து விடுப்பட தினசரி உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம்.news 31 08 2014 98kl

Related posts

உடலை உறுதியாக்கும் ஃப்ரீ வெயிட் பயிற்சிகள்

nathan

உங்களது இளமையை ஏழாண்டுகள் நீட்டிக்கும், அரை மணிநேர நடைப்பயிற்சி!

nathan

முதுகு வலியை குணமாக்கும் வக்ராசனம்

nathan

கைத்தசைகளை குறைக்க உதவும் 4 உடற்பயிற்சிகள்

nathan

இடை அழகுக்கு பயிற்சிகள்!

nathan

தினசரி உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்

nathan

30 மினிட்ஸ் வொர்க் அவுட்ஸ்

nathan

யோகா செய்வதால் என்னென்ன நோய்கள் குணமாகும் ?

nathan

கலோரிகளை எரிக்க சிறந்தது ஜாக்கிங்கா? சைக்கிள் பயிற்சியா?

nathan