31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
தலைமுடி சிகிச்சை

தீவிரமான பொடுகு தொல்லையா? வெங்காயச் சாறை உபயோகப்படுத்தும் வழிகள்!!

பொடுகு பலருக்கும் பிரச்சனை. அதுவும் சிலருகு குளிர்காலத்தில் தீவிரமாக இருக்கும். செதில் செதிலாக தலைச் சருமம் உதிரும்.

இதனை போக்க பொடுகு ஷாம்புவை போடுவது தவறு. ஏனென்றால் அவை கூந்தலை இன்னும் வறட்சியடையச் செய்து மோசமான விளைவை தந்துவிடும்

பொடுகிறது வெளிப்புற மற்றும் உட்புற மோசமான ஆரோக்கியமற்ற சூழ் நிலையே காரணமாகும். ஹார்மோன் பிரச்சனை, சுகாதாரமில்லாமலிருப்பது, இவையெல்லாம் உட்புற காரணங்கள்.

உபயோகப்படுத்தும் ஷாம்பு, நீர், கலரிங்க் ஆகிய்வை வெளிப்புற காரணங்கள். இதனை எப்படி வெங்காயச் சாறு குணமாக்கும் என பார்க்கலாம்.

பாசிப்பயிறுடன் : பச்சைப் பயிறு பொடி செய்து அதில் வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவ வேண்டும். வாரம் ஒருமுறை செய்து பாருங்கள். விரைவில் பலன் தெரியும்.

பீட்ரூட் பொடுகு சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. பீட்ரூட்டை சாறெடுத்து அதனுடன் சம அளவு வெங்காயச் சாறு கலந்து தலையில் த்டவுங்கள்.

புடலங்காயை சாறெடுத்து அதனுடன் வெங்காயச் சாறு கலந்து தலையில் த்டவி 20 நிமிடம் கழித்து அலசுங்கள். பொடுகை கட்டுப்படுத்தும்.

வெந்தயத்துடன் : 2 ஸ்பூன் வெந்தயத்தை ஊற வைத்து மறு நாள் அதனை அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் வெங்காயச் சாறு கலந்து தலையில் தேயுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளியுங்கள். வாரம் ஒருமுறை செய்தால் பொடுகு காணாமல் போய்விடும்.

கற்றாழை சாறுடன் : கற்றாழை ஜெல்லுடன் வெங்காயச் சாறு கலந்து தலைக்கு த்டவுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசுங்கள். இது நல்ல பலனைத் தரும். வாரம் 3 நாட்கள் செய்யலாம்.

எலுமிச்சை சாறுடன் : தீவிரமாக பொடுகு தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சை சாறையும் வெங்காயச் சாறையும் சம அளவு எடுத்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளியுங்கள். பலன் கிடைக்கும்

Related posts

தலைமுடி நரைப்பதைத் தடுக்க முடியும்..

nathan

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க செம்பருத்தி இலைகளை எப்படி பயன்படுத்துவது?

nathan

எலிவால் கூந்தலுக்கு என்னதான் தீர்வு?

nathan

உங்களுக்கு தெரியுமா பொடுகைப் போக்கும் கல் உப்பு!

nathan

கூந்தல் அழகுக் குறிப்புகள்

nathan

உங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்..!

nathan

வீட்டிலேயே உங்கள் கூந்தலை புதுப்பிக்க சூப்பர் டிப்ஸ்..!!

nathan

தலைக்கு குளிக்க நேரமில்லையா? உங்க தலை கப்பு அடிக்குதா? இதோ சில டிப்ஸ்…

nathan

பொடுகுத் தொல்லையா?

nathan