Do not exercise fast 1
உடல் பயிற்சி

எந்த காரணங்களுக்காக உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கலாம்

உடலுக்கு பயிற்சி அவசியம்தான். ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாக போனால் நோயாகவும் மாறக்கூடும். எனவே எப்போதெல்லாம் உடற்பயிற்சி தேவையில்லை என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்! உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடல் நலம் சீராகும் வரை ஜிம்முக்குப் போகாதீர்கள். ‘சின்ன தலைவலி, ஜுரம் அல்லது சளி என்றால் கூட உடற்பயிற்சியை நிறுத்துவிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
களைப்பாகவோ டென்ஷனாகவோ உள்ள நேரங்களிலும் உடற்பயிற்சியை அறவே தவிர்க்க வேண்டும். உடலில் காயம் பட்டால் அந்த காயம் ஆறும் வரை உடற்பயிற்சியை கண்டிப்பாக நிறுத்தி விட வேண்டும். காயம் நன்றாக குணமடைந்தபிறகு மீண்டும் ஜிம் போகலாம். முதல் நாள் இரவில் அதிகளவில் குடித்திருந்தாலும் மறுநாள் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.
போதை தெளியாமல் செய்யும் எந்த உடற்பயிற்சியும் பலன் அளிக்காது. தினமும் 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். சரியாக தூக்கம் இல்லாதவர்களும் அன்றைய தினம் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் சரியான தூக்கம் இல்லாத போது உடல் சோர்வுடன் இருக்கும். அந்த நேரங்களில் நம்மால் சரியாக உடற்பயிற்சியில் கவனம் செலுத்த முடியாது.Do not exercise fast

Related posts

வீட்டிலேயே நடைப்பயிற்சி

nathan

வாய்வு தொல்லை இருப்பவர்கள் தொடர்ந்து இந்த முத்திரையை செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.

sangika

மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தரும் பவன முக்தாசனம்

nathan

ரஷ்யன் ட்விஸ்ட் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பயன்கள்

nathan

ஸ்லிம்மான தொடை பெற-இதோ!!

nathan

தொப்பையை குறைக்கும் நின்றநிலை சைக்கிள் பயிற்சி

nathan

இதயத்திற்கு நலன் தருவது ஓட்டமா? நடையா?

nathan

ஸ்லிம்மான தொடை பெற உடற்பயிற்சிகள்

nathan

தொடையில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்கும் 4 ஆசனங்கள்

nathan