உங்கள் கூந்தலின் வகை எப்படிபட்டது? ஏன் முடி வளரவில்லை. ஏன் வற்ண்டு போகிறது என தெரிய வேண்டுமானால் ஒரு தகுந்த ட்ரைகாலஜிஸ்ட்டிடம்தான் செல்ல வேண்டும் .
ஆனால் அதற்கு இருமடங்கு செலவழிக்க நீங்கள் தயாராக வேண்டும். பலனும் சுமாராகத்தான் இருக்கும்.
உங்கள் கூந்தலின் பிரச்சனையை எளிய முறையில் சில நொடிகள் தெரிந்து கொள்ளலாம். எப்படி என பாருங்கள்.
டெஸ்ட் செய்யும் முறை :
ஒரு 250 மி.லி அளவு நீரை எடுத்துக் கொள்ளுங்கள்.
அந்த நீரில் உங்கள் தலை முடி ஒன்றை பிடுங்கி போடுங்கள்.
உங்கள் முடி மிதந்தால் உங்கள் கூந்தல் ஆரோக்கியமானது என அர்த்தம்.
உங்கள் கூந்தல் உள்ளே சென்றால் அது பாதிப்படைந்த முடி என்று அர்த்தம்.
ஸ்கால்ப்பில் பாதிப்பு இருந்தால் வளரும் கூந்தலில் அதிக உறிஞ்சும் தன்மை உண்டாகும். எனவே நீர் முடியை உறிஞ்சி உள்ளிழுத்துக் கொள்ளும்.
இந்த பாதிப்பிருந்தால் விரைவில் நரை முடி மற்றும் வறட்சி அடைவதற்கான சாத்தியங்கள் உண்டு. ஆகவே உடனேயே விழித்துக் கொண்டு தகுந்த சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.