அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

கழுத்தில் படரும் கருமை

images (13)கத்தை போலவே கழுத்தையும் அக்கரையுடன் பராமரிக்க வேண்டும். சிலருக்கு கழுத்து பகுதி கறுத்து காணப்படும். இந்த கருமையை நீக்க இயற்கை பிளீச்சாக எலுமிச்சை பயன்படுகிறது. தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பு எலுமிச்சை சாறை கழுத்தில் கருமையான பகுதிகளில் தடவி ஊறவிட்டு குளிக்க வேண்டும். இதனால் படிப்படியாக கருமை மறையும்.

இது போல் பால் பவுடர் ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். இதை தேன், எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய் சேர்த்து பசை போல கலக்கவும். இந்த கலவையை கழுத்தில் தடவி அரை மணி நேரம் ஊறவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவி வரவும். வாரம் ஒருமுறை இதுபோல் செய்தால் கழுத்து பளபளக்கும்.

இது போல் தயிர், தக்காளி ஜூஸ் அல்லது மஞ்சள்தூள், கறிவேப்பிலை, எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து பூசலாம். கோதுமை மாவில் வெண்ணெய் கலந்து பூசலாம். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.

செம்பருத்தி பூ, ஆவாரம் பூ, மஞ்சள் கரிசலாங்கண்ணி, அவரி இலை போன்றவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் நிறம் கூடும்.
குங்குமப்பூ, வால்மிளகு, லவங்கம், ஓமம், சாம்பிராணி தலா 25 கிராம் எடுத்து பொடிசெய்து வைத்துக் கொள்ளவும். இதில் அரை ஸ்பூன் எடுத்து சில சொட்டு பால் விட்டு கலந்து முகம், கழுத்தில் பூசிவர சிகப்பழகு கூடும்.

Related posts

ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பேபி ஆயிலின் பல்வேறு பயன்பாடுகள்

nathan

உங்கள் முகத்தில் உள்ள முகப்பரு வடுக்கள் மாற‌ 5 அற்புதமான‌ இயற்கை வைத்தியங்கள்

nathan

பேஷியல் டிப்ஸ்

nathan

வெளிநாடு ஒன்றில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட இலங்கை பெண் -பதற வைக்கும் தகவல்!

nathan

சன் ஸ்க்ரீன் அவசியமா?

nathan

முல்தானி மெட்டியை எப்படி பயன்படுத்துவது முகம் வெள்ளையாவதற்கு?

nathan

தொப்பையை குறைக்க உதவும் சலபாசனம்…!

nathan

கற்றாழை நீங்கள் அறியாத ஒரு பிரச்சனைக்கு அசத்தலான தீர்வை வழங்கும்.!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… பிறப்புறுப்பை துர்நாற்றமின்றி வைத்துக் கொள்ள சில அற்புதமான வழிகள்!!!

nathan