29.1 C
Chennai
Tuesday, Feb 25, 2025
201704201523159530 how to make Chicken cheese pasta SECVPF
சிற்றுண்டி வகைகள்

குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் – சீஸ் பாஸ்தா

விடுமுறை நாட்களில் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு வித்தியாசமான ரெசிபியை செய்து கொடுக்க ஆசைப்பட்டால், இத்தாலியன் ரெசிபியான சிக்கன் – சீஸ் பாஸ்தாவை செய்து கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் – சீஸ் பாஸ்தா
தேவையான பொருட்கள் :

எலும்பில்லாத சிக்கன் – 1 கப்
பாஸ்தா – 250 கிராம்
பூண்டு – 8 பற்கள்
சீஸ் – 1/4 கப்
கிரீம் – 1/2 கப்
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
பால் – 3-4 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் – 1 டீஸ்பூன்
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* பாஸ்தாவை வேக வைத்து கொள்ளவும்.

* பூண்டை நன்றாக தட்டிக்கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், பூண்டு, சிக்கன் சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து வாணலியை மூடி 15 நிமிடம் சிக்கன் துண்டுகளை வேக வைக்க வேண்டும்.

* ஒரு பௌலில் சோள மாவு, மற்றும் சிறிது பால் சேர்த்து கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.

* சிக்கன் வெந்ததும், அதில் கிரீம், சோள மாவு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, கலவை நன்கு கெட்டியாக வரும் வரை கைவிடாமல் கிளறி விட வேண்டும்

* கலவையானது கெட்டியானதும், அதில் மீதமுள்ள பாலை சேர்த்து கலவையை கொதிக்க விட வேண்டும்.

* பின் அதில் சீஸ் போட்டு, தீயை குறைவில் வைத்து, சீஸை உருக வைக்க வேண்டும்.

* அடுத்து அதில் கொத்தமல்லி மற்றும் வேக வைத்த பாஸ்தா சேர்த்து கிளறி, பொருட்கள் அனைத்தும் பாஸ்தாவில் ஒட்டுமாறு பிரட்டவும்.

* கடைசியாக மிளகு தூள், சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

* சுவையான சிக்கன் பாஸ்தா ரெடி!!!201704201523159530 how to make Chicken cheese pasta SECVPF

Related posts

சுவையான சத்தான பாதாம் ராகி மால்ட்

nathan

முட்டை பரோட்டா செய்வது எப்படி

nathan

எளிமையாக செய்யக்கூடிய ஜவ்வரிசி உப்புமா

nathan

சுவையான சத்தான ஒட்ஸ் வெண்பொங்கல்

nathan

பால் அடை பிரதமன்

nathan

சுவையான ஹைதராபாத் கராச்சி பிஸ்கட்

nathan

பெப்பர் அவல்

nathan

வெந்தய தயிர் பச்சடி

nathan

சுவையான… அரிசி சாத கட்லெட்

nathan