28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
மருத்துவ குறிப்பு

காதலைக் காயப்படுத்தும் 8 விஷயங்கள்

உங்கள் காதல் காயப்படாமல் இருக்க நீங்கள் எட்டு விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும். அந்த 8 விஷயங்கள் என்னவென்று விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

காதலைக் காயப்படுத்தும் 8 விஷயங்கள்
காதலுக்கு எல்லை உண்டு. எல்லை மீறினால் எப்போது வேண்டுமானாலும் காதல் காயமடைந்து, முறிந்துபோகலாம். பிறகு, ‘என்ன ஆச்சுன்னே தெரியலை.. காதலி இப்போது பேசுவதே இல்லை’ என்று வருத்தப்பட நேரிடும்.

உங்கள் காதல் காயப்படாமல் இருக்க நீங்கள் எட்டு விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும்.

1 காதலில் நேர்மையுடனும், ஒழுக்கத்துடனும் இருக்க வேண்டும். காதலி கவனித்தாலும், கவனிக்காவிட்டாலும் நியதிகளை மீறக்கூடாது. உதாரணமாக புகைப்பிடிக்க மாட்டேன் என்று உங்கள் காதலிக்கு வாக்கு கொடுத்திருக்கலாம். ஆனால் நீண்ட நேரம் தனிமையில் காத்திருக்கும்போதோ அல்லது ஏதோ மன வருத்தம் ஏற்படும்போதோ, காதலிக்கு தெரியவா போகிறது? என்றெண்ணி புகைப்பிடிக்கக் கூடாது. மற்ற பெண்களுடன் பழகுவது போன்ற தவறுகளிலும் ஈடுபடக் கூடாது. இதுபோன்ற மறைமுகத் தவறுகள் காதலிக்கு தெரிய வரும்போது காதல் முறிந்து போகும் என்பது நிச்சயம். எனவே திரைமறைவு திருவிளையாடல்களை தவிருங்கள்.

2 ஒருவர் மற்றவர் மீது குற்றம் சுமத்துவதும், குற்றங்களை மிகைப்படுத்திப் பேசி பிரச்சினையை பெரிதாக்குவதும் பிரிவை உருவாக்கிவிடும். உதாரணமாக நண்பன் ஒருவரிடம் காதலி பேசியிருப்பது தெரிய வந்தால், அதை சந்தேகக் கண்ணோடு பார்ப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் குறுகுறுத்த எண்ணத்தோடு அவர்கள் என்ன பேசினார்கள், எப்போதெல்லாம் பேசினார்கள், தவறாக பழகுவார்களோ? என்று எண்ணிக் கொள்வதும், அதை அறிந்து கொள்ளும் ஆவலோடு துருவித் துருவி விசாரிப்பதும், மறைமுகமாக கண் காணிப்பதும் தவறு. ஏனெனில் சந்தேகமும், காதலும் எதிரெதிர் துருவங்கள்.

201704191123191080 8 things to love hurt SECVPF

3 காதலை ஏற்றுக் கொள்ளும் வரை கன்னாபின்னாவென்று பின்னால் சுற்றுவது, கெஞ்சி இறங்கித் திரிவது, அன்பை வாரி வழங்குவது என்று இருந்துவிட்டு, காதலை ஏற்றுக் கொண்ட பிறகு ஏனோதானோவாக பொறுப்பற்று நடந்துகொண்டால் காதல் காயமாகிவிடும். ‘நீங்கள் முன்புபோல் அன்பாக இல்லை. எப்போதும் எரிந்து விழுகிறீர்கள்’ என்று பெண்கள் புலம்பு வதற்கு, காதலை ஏற்றுக்கொண்ட பின்பு ஆண்கள் காட்டும் அலட்சியப் போக்கே காரணம்.

காதலர்கள் சந்திக்க பல்வேறு தடைகள் இருக்கலாம். அதனால் நினைத்த படி சந்திக்க முடியாமல் போகலாம். ஆனால் திட்டமிட்டு காரணங்களை உருவாக்கி, சந்திப்பதை வேண்டும் என்றே தவிர்ப்பது காதல் முறிய காரணமாகிவிடும்.

4 காதலிக்கும் ஜோடியினர் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தும் விதத்தில் பேசவேண்டும். குறைகளைகூட மென்மையாக வெளிப்படுத்தவேண்டும். அப்படியில்லாமல், ‘நீ ஒரு சோம்பேறி, நீ அழகாக இல்லை, உனக்கு ஒழுங்கா டிரெஸ் பண்ணவே தெரியலை. உனக்கு புத்திசாலித்தனமாக நடந்துக்கத் தெரியலை’ என்று குத்திக்காட்டுவது தவறு. இத்தகைய பேச்சுக்கள் மன விலகலை உருவாக்கிவிடும்.

5 தன்மானத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் ஏளனமாக பேசவோ, நடக்கவோ கூடாது. உதாரணமாக பெண்களைப் பற்றிய இழிவான கருத்துகளை பேசிவிட்டு, ‘நீயும் ஒரு பெண்தான்’ என்று முடிச்சுபோடக் கூடாது. ‘நான் ஒரு ஆண், என்னால் முடிந்தது உன்னால் முடியுமா?’ என்பதுபோல சவால்விடக்கூடாது. ‘ஆண் என்பதால் அப்படித்தான் நடப்பேன்’ என்று அடாவடியாக செயல்படவும்கூடாது. பெண்கள் ஆண்களின் தைரியத்தை ரசிப்பார்கள். ஆனால் அடாவடித்தனத்தை ஆதரிக்காமல் காதலை முறித்துக்கொள்வார்கள்.

6 காதலில் ஓரளவு பொய் இருக்கலாம். ஆனால் காதலே பொய்யாக இருக்கக்கூடாது. காதலன் அல்லது காதலி தங்கள் இணையிடம் தன்னைப் பற்றி ஓரளவு மிகைப்படுத்திக்கூறலாம். ஆனால் தகவல் அனைத்தும் கற்பனையானதாகவும், முழு பொய்யானதாகவும் இருந்துவிடக்கூடாது. அதுபோல் அழகு சார்ந்த ஒப்பனையிலும் ஓரளவு மேம்படுத்தல் இருக்கலாம். ஆனால் முழுகவர்ச்சியும் போலியானதாக இருந்துவிடக்கூடாது. கடன் வாங்கி செலவு செய்துவிட்டு, தன்னை வசதி மிகுந்தவராக காட்டிக்கொள்வதிலும் அக்கறைகாட்டக்கூடாது. கவர்ச்சி, கற்பனை, போலித்தனம் மூன்றும் எளிதாக காதலை காயப்படுத்திவிடும்.

7 உங்கள் மீது அன்பும், உறுதியான நம்பிக்கையும் கொண்ட காதலரை (அல்லது காதலியை) ஏமாற்றக்கூடாது. வருவேன், தருவேன், உடனிருப்பேன் என்பன போன்ற வாக்குறுதிகளை வேடிக்கையாக நினைக்கக்கூடாது. தவறாமல் நிறைவேற்ற வேண்டும். உங்கள் மீதான நம்பிக்கையை நிலைக்கவும், நீடிக்கவும் செய்ய வேண்டும். நம்பிக்கை குறையும்போது காதல் காயமடையக்கூடும்.

8 காதலர்களில் ஒருவர் மனதுகூட அலைபாயக்கூடாது. ஒருவரோடு மனம் இணங்கி காதலித்துக்கொண்டிருக்கும்போது, ‘இவரைவிட சிறந்தவர் கிடைத்தால், இவரை கைவிட்டுவிடலாம்’ என்ற எண்ணம் இருக்கவேகூடாது. அப்படி ஒரு எண்ணம் இருந்தால் அந்த காதல் ஈடேறாதது மட்டுமல்ல, ஆபத்தான பின்விளைவுகளையும் உருவாக்கிவிடும்.

காதலை காயப்படுத்தும் விஷயங்களை பட்டியலிட்டுவிட்டோம்! இனி கவனமாக காதலிப்பீர்கள்தானே!

Related posts

தற்கொலைகள்

nathan

கர்ப்ப காலத்தில் நீங்கள் எப்போது எல்லாம் மருத்துவரிடம் செல்ல வேண்டும் ?

nathan

இதோ துளசியின் விரிவான மருத்துவப் பயன்கள் உள்ளே…..

nathan

சளி குறைய – பாட்டி வைத்தியம்

nathan

உங்களுக்கு தெரியுமா தக்காளி அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நோய்கள்?

nathan

உங்க காதலியின் ராசியை வைத்து, காதல்ல அவங்க எப்படிபட்டவங்கனு தெரிஞ்சுக்கணுமா?

nathan

எலுமிச்சை சாறு

nathan

உங்களுக்கு தெரியுமா ப்ளாக் டீ குடித்தால் கிடைக்கும் வியப்பூட்டும் நன்மைகள்

nathan

அதிகாலையில் வேகமாக எழுவதற்கான சில வழிகள்!!!

nathan